News November 14, 2025
கார்த்திக் சுப்பராஜுக்கு வாய்ப்பு கொடுப்பாரா ரஜினி?

குறைந்த பட்ஜெட்டில், ஓவர் அடிதடி- ரத்தம் இன்றி ஒரு படத்தை எடுக்கவே சுந்தர் சி-ஐ ரஜினி தேர்வு செய்திருக்கலாம். ஆனால், சுந்தர்.சி விலகிய நிலையில், அந்த வாய்ப்பு கார்த்திக் சுப்பராஜுக்கு கிடைக்கலாம் என கூறப்படுகிறது. ரொம்ப வருஷத்துக்கு முன்பே, கார்த்திக் சுப்பராஜ் ரஜினிக்கு கதை சொல்லிவிட்டு காத்திருக்கிறாராம். ஏற்கெனவே, ‘பேட்ட’ என்ற ஹிட் படத்தை கொடுத்த அவரை டிக் அடிப்பாரா ரஜினி?
Similar News
News November 14, 2025
லாலு பிரசாத் யாதவின் மகன் பின்னடைவு

RJD தலைவர் லாலு பிரசாத் யாதவின் மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ், தான் போட்டியிட்ட மஹுவா தொகுதியில் பின்னடைவைச் சந்தித்துள்ளார். யாதவ் சமூகத்தினர் அதிகமுள்ள இத்தொகுதியில் அவருக்கு தற்போது பின்னடைவு ஏற்பட்டுள்ளது. RJD-யில் இருந்து நீக்கப்பட்ட அவர், ஜன்ஷக்தி ஜனதா தள் (JJD) எனும் புதிய கட்சியை தொடங்கி போட்டியிட்டார்.
News November 14, 2025
பிஹார்: பெரும்பான்மையை நெருங்கும் NDA

பிஹார் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் பெரும்பான்மைக்கு 122 தொகுதிகள் தேவை. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் NDA கூட்டணி பெரும்பான்மை பெற்று ஆட்சியை பிடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல வாக்கு எண்ணிக்கை தொடங்கிய 1 மணி நேரத்திலேயே 110 தொகுதிகளுக்கு மேல் NDA முன்னிலையில் இருக்கிறது.
News November 14, 2025
இன்றைய OTT விருந்து!

தியேட்டரில் வாரா வாரம் புது படங்கள் ரிலீசாவதை போலவே, OTT-யிலும் வாரா வாரம் புது படங்கள் வெளிவர தொடங்கி விட்டன. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, ஆங்கிலம் என பல மொழிப் படங்கள், இந்த வார OTT விருந்தாக இன்று வெளியாகியுள்ளன. அந்த படங்களின் லிஸ்ட்டை தெரிஞ்சிக்க மேலே உள்ள போட்டோக்களை வலது பக்கமாக Swipe செய்து பாருங்க. இதில், எந்த படத்தை பார்க்க நீங்க வெயிட்டிங்?


