News November 2, 2025
காஞ்சி: B.Sc, B.E, B.Tech போதும், ரூ.1.4 லட்சம் சம்பளம்!

மத்திய அரசின் பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் 340 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ், கம்யூனிகேஷன், டெலி கம்யூனிகேஷன், மெக்கானிக்கல், கணினி அறிவியல் ஆகிய பிரிவுகளில் B.E / B.Tech / B.Sc முடித்திருக்க வேண்டும். சம்பளமாக ரூ.40,000-ரூ.1,40,000 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இந்த <
Similar News
News November 2, 2025
காஞ்சிபுரம்: விவசாயிகளுக்கு GOOD NEWS!!

காஞ்சி தோட்டக்கலைத் துறை மூலம் விவசாயிகளுக்கு சாகுபடியுடன் தோப்பாகவோ அல்லது வரப்புகளை சுற்றி (பார்டர் கிராப்) வைக்க விலைமதிப்புள்ள தேக்கு மரம், மகாகனி, வேங்கை, செம்மரம் போன்ற மரங்கள் வளர்ப்பதற்கு மானியத்தில் மரங்கள் விநியோகம் செய்யப்படுகிறது. இது தேவைப்படும் விவசாயிகள் தோட்டக்கலை அதிகாரிகளை 95855 80403 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம் என்று தோட்டக்கலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
News November 2, 2025
காஞ்சி: தேர்வு இல்லாமல் வங்கி வேலை

காஞ்சிபுரம் மக்களே, நபார்டு வங்கியில் (NABARD) பல்வேறு காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 12-வது தேர்ச்சி பெற்ற 18-33 வயதுகுட்பட்டவர்கள் நவ.15-க்குள் விண்ணப்பிக்கலாம். இதில் ஊதியமாக மாதம் ரூ.20,000 – ரூ.30,000 வரை வழங்கப்படும். இதற்கு தேர்வு கிடையாது. நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். விருப்பமுள்ளவர்கள் nabfins.org/Careers எனும் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்லாம்.
News November 2, 2025
காஞ்சிபுரத்தில் லீவுக்கு எங்கெல்லாம் போகலாம்?

1.காமாட்சி அம்மன் ஆலயம் 2.காஞ்சி மடம், 3.சகுந்தலா ஜகந்நாதன் அருங்காட்சியகம், 4.டாக்டர் C.N.அண்ணாதுரை நினைவு இல்லம் 5.ஸ்ரீ வரதராஜ ஸ்வாமி திருக்கோயில் 6.உலகளந்த பெருமாள் கோயில் 7.சுந்தர வரத பெருமாள் கோயில் 8.ஸ்ரீ அஷ்டபுஜ பெருமாள் கோயில் 9.வைகுண்ட பெருமாள் கோயில் 10.ஏகாம்பரநாதர் கோயில். உங்க நண்பர்களுக்கு ஷேர் செய்து தெரியப்படுத்துங்க.


