News December 1, 2025
காஞ்சிபுரம் பள்ளி மாணவர்கள் கவனத்திற்கு!

தென்மேற்கு வங்கக்கடலில் உருவான டிட்வா புயல் நள்ளிரவில் வலுவிழந்தது. இந்நிலையில் வலுவிழந்த டிட்வா புயல் தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக சென்னைக்கு 90 கி.மீ தூரத்தில் நிலைகொண்டுள்ளது. இது மதியம் வக்கீல் மேலும் வலுவிழக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் காஞ்சிபுரத்தில் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பள்ளி செல்லும் குழைந்தைகள் குடை, ரெயின் கோர்ட் கொண்டு செல்லுங்கள்.
Similar News
News December 2, 2025
ஏவுகணை கிராமத்தில் கூரை சரிந்து பசுங்கன்று உயிரிழந்தது.

ஒழுகரை கிராமம் பழைய ரேஷன் கடை தெருவில் வசித்து வரும் விவசாயியான வையாபுரி மகன் கணேசன் இவர் கால்நடை வளர்த்து விவசாயம் செய்து வருகிறார். தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக அவர் வீட்டு பின்புறம் அமைக்கப்பட்டு இருந்த சிமென்ட் சீட் கூரை திடீரென சரிந்து விழுந்த போது அங்கு கட்டப்பட்டிருந்த பசு கன்று மேல் விழுந்ததில் சம்பவ இடத்திலேயே பசு கன்று உயிரிழந்தது. இதனால் விவசாய குடும்பம் சோகத்தில் ஆழ்ந்தது.
News December 2, 2025
வாலாஜாபாத் அருகே தடை செய்யப்பட்ட குட்கா பொருள் விற்ற நபர் கைது

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ராஜ வீதியில் உள்ள நூர்ஜகான் ஸ்டோரில் அரசால் தடை செய்யப்பட்ட கொடு்கா பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த சம்மந்தமாக வழக்கு பதிவு செய்யப்பட்டு முகமதியர் தெருவை சேர்ந்த ஆதம்பா பாட்ஷா இன்று (டிச.01) வாலாஜாபாத் போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 1616 கிராம் எடையுள்ள குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.
News December 2, 2025
காஞ்சிபுரத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

‘டிட்வா’ புயல் காரணமாக இன்று (டிச.2) காஞ்சிபுரத்தில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், காஞ்சிபுரத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் உத்தரவிட்டுள்ளார். நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க!


