News November 11, 2025

கள்ளக்குறிச்சி: BE படித்தால் சூப்பர் வேலை!

image

கள்ளக்குறிச்சி மாவட்ட பட்டதாளிகளே.., வேலை தேடுபவரா நீங்கள்? உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில்( இஸ்ரோ ) பல்வேறு பிரிவுகளின் கீழ் 141 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு 10ஆவது முதல் BE படித்தவர்கள் வரை யாரும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க நவ.14ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க <>இங்கே<<>> கிளிக். இதை உடனே அனைவருக்கும் SHARE.

Similar News

News December 9, 2025

கள்ளக்குறிச்சி: மனமுடைந்த மதுபிரியர் விபரீத முடிவு!

image

கள்ளக்குறிச்சி: புத்தந்தூரை சேர்ந்த பெரியசாமி குடிப்பழக்கம் கொண்டவர். இவர் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்ததை பார்த்த அவரது உறவினர்கள் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த பெரியசாமி நேற்று தனது விவசாய நிலத்தில் விஷத்தை குடித்து மயங்கி விழுந்துள்ளார். அவரை உறவினர்கள் மீட்டு மருத்துவமனை அழைத்துச் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News December 9, 2025

கள்ளக்குறிச்சி அருகே கல்லூரி மாணவி தற்கொலை?

image

நாட்டார்மங்கலத்தை சேர்ந்த சகி கள்ளக்குறிச்சி அரசு கலை கல்லூரியில் படித்து வருகிறார். கடந்த 6-ம் தேதி பல்கலை தேர்விற்கு செல்போன் எடுத்து சென்றதால் பேராசிரியர் கண்டித்து பெற்றோருக்கு தெரிவித்துள்ளார். இதனால் மனமுடைந்து கல்லூரியில் இருந்து சென்றவர் கோட்டைமேடு பகுதியில் மயங்கிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். போலீசார் வீசாரித்து வருகின்றனர்.

News December 9, 2025

கள்ளக்குறிச்சி: கர்ப்பிணி சென்ற பைக் மீது கார் மோதி விபத்து

image

உளுந்தூர்பேட்டை அருகே இறைஞ்சி கிராமத்தைச் சேர்ந்தவர் சுகன்யா வயது (32). இவர் தனது மாமனார் சாமிதுரை என்பருடன் வேப்பூரில் இருந்து இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தபோது, பின்னால் வந்த கார் பைக் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த ஏழு மாத கர்ப்பிணியான சுகன்யா, உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!