News November 1, 2025

கள்ளக்குறிச்சி: போதைப் பொருட்கள் விற்றவர் கைது!

image

கள்ளக்குறிச்சி: சின்னசேலம் அடுத்த வரதப்பனுார் கிராமத்தில் போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், நேற்று (அக்.31) போலீசார் அந்த கிராமத்தில் சோதனையில் ஈடுபட்ட போது, அதே கிராமத்தைச் சேர்ந்த வேல்முருகன் என்பவர் தனது பெட்டிக் கடையில் ஹான்ஸ் உள்ளிட்ட போதைப் பொருட்களை வைத்திருப்பதை கண்டுபிடித்தனர். மேலும், அவர் மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர்.

Similar News

News November 2, 2025

கள்ளக்குறிச்சி: B.Sc, B.E, B.Tech போதும், ரூ.1.4 லட்சம் சம்பளம்!

image

மத்திய அரசின் பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் 340 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ், கம்யூனிகேஷன், டெலி கம்யூனிகேஷன், மெக்கானிக்கல், கணினி அறிவியல் ஆகிய பிரிவுகளில் B.E / B.Tech / B.Sc முடித்திருக்க வேண்டும். சம்பளமாக ரூ.40,000-ரூ.1,40,000 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <>இந்த லிங்க் <<>>மூலம் நவ.14ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க.

News November 2, 2025

கள்ளக்குறிச்சி:தெரு நாய்கள் கடித்து 4 வயது சிறுவன் காயம்

image

வாணாபுரம் அடுத்த அரியலுார் கிராமத்தைச் சேர்ந்த நாகராஜ். இவர் தனது குடும்பத்தினருடன் சங்கராபுரம் அடுத்த புதுப்பாலப்பட்டு கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டின் சுப நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
நேற்று,(நவ.1) நாகராஜின் மகன் விதுன்ராஜ் 4; தெருவில் விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது, அப்பகுதியில் திரிந்த தெரு நாய்கள் விதுன்ராஜை கடித்து குதறியது. சிறுவனை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

News November 2, 2025

கள்ளக்குறிச்சி: தந்தை திட்டியதால் விஷம் அருந்தி மாணவி தற்கொலை!

image

கள்ளக்குறிச்சி: கச்சிராயப்பாளையம் அருகே காரனூர் சேர்ந்த மணிவண்ணன் மகள் மோனிஷா சின்னசேலம் அருகே தனியார் கல்லூரியில் இன்ஜினியரிங் 1ம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று (நவ.1) மோனிஷா வீட்டு வேலைகளை செய்யவில்லை என அவருடைய தந்தை திட்டியுள்ளார். இதனால், மோனிஷா வீட்டில் இருந்த விஷயத்தை எடுத்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கச்சிராயபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!