News November 1, 2025
கரூர்: GAS சிலிண்டர் வைத்திருப்போர் கவனத்திற்கு!

கரூர் மக்களே, ஒரே நேரத்தில் சிலிண்டர்கள் புக் செய்வதால் வீட்டிற்கு வர தாமதமாகுதா? இனி அந்த கவலை இல்லை (Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP Gas: 9222201122) இந்த எண்களில் வாட்ஸ்அப்பில் “HI” என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION -ஐ தேர்ந்தெடுங்க.. அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே கேஸ் வந்துடும். இதை உங்க நண்பர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.
Similar News
News November 2, 2025
கரூர்: பெட்டிக்கடையில் மது விற்ற நபர் கைது

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கள்ளை ஊராட்சி சுக்காம்பட்டியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி மகன் ரமேஷ் (37). இவர் அப்பகுதியில் தனக்கு சொந்தமான பெட்டிக்கடையில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்துள்ளார். தகவல் அறிந்து அங்கு சென்ற நங்கவரம் போலீசார் மது விற்ற ரமேஷ் மீது வழக்குப்பதிந்து இன்று கைது செய்தனர். மேலும் விற்பனைக்கு வைத்திருந்த அனைத்து மதுபாட்டிகளும் பறிமுதல் செய்தனர்.
News November 1, 2025
தாயுமானவர் திட்டத்தின் கீழ் வீட்டிற்கு வரும் ரேஷன் பொருட்கள்

கரூரில் தாயுமானவர் திட்டத்தின் கீழ், நவம்பர் மாதம் 3, 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு நேரடியாக சென்று, குடிமைப்பொருட்களை விநியோகம் செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது.
எனவே, பயனாளர்கள் மேற்கண்ட தேதிகளில், குடிமைப்பொருட்களை பெற்றுக்கொள்ளலாம்.என மாவட்ட ஆட்சியர் தங்கவேல் அறிவித்துள்ளார்.
News November 1, 2025
கரூர்: சீட்டு கட்டி ஏமாந்தால் என்ன செய்வது?

சீட்டு நடத்துபவர்கள் ஏமாற்றினால் உடனே அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளியுங்கள். மாவட்ட ஆட்சியரிடம் ஏமாற்றப்பட்டது குறித்து மனுவாக அளிக்கலாம். சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுக்க வழக்கறிஞரை அணுகுவது நல்லது. புகாரில், சீட்டு கட்டிய விவரங்கள், ஏமாற்றப்பட்ட விதம், எவ்வளவு பணம் இழந்தீர்கள் போன்ற விவரங்களை தெளிவாக குறிப்பிடவும். அதற்கான ஆதாரமாக வைத்துக்கொள்ளவும். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.


