News November 2, 2025
கடலூர்: ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் (01.11.2025) இரவு கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் ரோந்து செல்லும் காவல் அதிகாரிகள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 2, 2025
கடலூர்: போக்சோ வழக்கில் வாலிபர் கைது

புவனகிரி அருகே சாக்காங்குடி சேர்ந்தவர் அருண்ராஜ(34). இவர் வீட்டில் தனியாக இருந்த 14 வயது சிறுமிக்கு, வீட்டில் யாரும் இல்லை என்பதை தெரிந்து கொண்டு, குடிபோதையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில், சேத்தியாத்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் அருண்ராஜை போக்சோ வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
News November 2, 2025
கடலூர்: வாகன பொது ஏலம் அறிவிப்பு

நிலஅளவைப் பதிவேடுகள் துறை உதவி இயக்குநரின் அலுவலகப் பணிகளுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட கழிவு செய்யப்பட்ட வாகனம் நவ.14ம் தேதி அன்று ஆட்சியர் அலுவலகத்தில் ஏலம் விடப்படுகிறது என்று மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார். ஏலத்தில் கலந்து கொள்கிறவர்கள் 10% பிணையத்தொகை வரைவோலையாக செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 2, 2025
கடலூர்: அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு

விருத்தாசலம் வட்டம், முதனை பெரியாண்டவர் கோயில் அருகில் உள்ள மயானத்தில் புதருக்குள் நேற்று (நவ.1) அடையாளம் தெரியாத ஆண் சடலம் அழுகிய நிலையில் கிடந்ததுள்ளது. இதனை கண்ட கிராம மக்கள் ஊ.மங்களம் காவல்துறைக்கு தகவல் தெரிவித்ததன் பேரில், போலீசார் சடலத்தை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


