News November 14, 2025

கடலூர்: இளம் பெண் தற்கொலை!

image

விருத்தாசலத்தை அடுத்த ஊத்தாங்கால் வீரமணி என்பவரின் மனைவி ஸ்ரீ பாரதி (29). இவர்களுக்கு திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகிறது. இந்நிலையில், நேற்று வீட்டில் தனியாக இருந்த ஸ்ரீ பாரதி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, ஊ.மங்கலம் போலீசார் அவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மகளின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக தாய் கொடுத்த புகாரின் அடிப்படையில் விசாரித்து வருகின்றனர்.

Similar News

News November 14, 2025

கடலூர்: கல்வி உதவித்தொகை வேண்டுமா?

image

கடலூர் மாவட்டம் இளம் சாதனையாளர்களுக்கான பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ், தேசிய கல்வி உதவித்தொகை பெறுவதற்கான காலம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் இன்று தெரிவித்துள்ளார். இதற்கு <>https://scholarships.gov.in<<>> என்ற இணையதளத்தின் மூலம் வருகிற நவ.25ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

News November 14, 2025

கடலூர்: இரவு ரோந்து செல்லும் காவலர்கல் விபரம்

image

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அவ்வகையில் நேற்று (நவ.13) இரவு 10 மணி முதல் இன்று (நவ.14) காலை 6 மணி வரை கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி உள்ளிட்ட இடங்களில் ரோந்து செல்லும் காவல் அலுவலர்கள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

News November 13, 2025

கடலூர்: மூதாட்டியிடம் நூதன முறையில் தங்கச் சங்கிலி பறிப்பு

image

சிதம்பரம், கனக சபை நகர் முதலாவது குறுக்குத் தெருவில் வசிப்பவர் விஜயலட்சுமி. இவர் வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இன்று(நவ.13) ஆட்டோவில் வந்த மர்ம நபர்கள் வீட்டிற்குள் புகுந்து, அருகாமையில் வீடு வாங்கிட்டேன் என்னை ஆசிர்வாதம் செய்யுங்கள். எனக் கூறி மூதாட்டியிடம் கழுத்தில் இருந்து ஐந்து பவுன் தங்கச்சங்கிலியை பறித்து சென்றுள்ளனர். புகாரின் பேரில் நகர காவல் ஆய்வாளர் சிவானந்தம் வழக்கு பதிந்துள்ளனர்.

error: Content is protected !!