News November 2, 2025

கடலூர்: அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு

image

விருத்தாசலம் வட்டம், முதனை பெரியாண்டவர் கோயில் அருகில் உள்ள மயானத்தில் புதருக்குள் நேற்று (நவ.1) அடையாளம் தெரியாத ஆண் சடலம் அழுகிய நிலையில் கிடந்ததுள்ளது. இதனை கண்ட கிராம மக்கள் ஊ.மங்களம் காவல்துறைக்கு தகவல் தெரிவித்ததன் பேரில், போலீசார் சடலத்தை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News November 2, 2025

கடலூர்: வாகன பொது ஏலம் அறிவிப்பு

image

கடலூர் நிலஅளவைப் பதிவேடுகள் துறை உதவி இயக்குநரின் அலுவலகப் பணிகளுக்காக, ஒதுக்கீடு செய்யப்பட்ட கழிவு செய்யப்பட்ட வாகனம் நவ.14ம் தேதி அன்று ஆட்சியர் அலுவலகத்தில் ஏலம் விடப்படுகிறது என்று மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.மேலும் ஏலத்தில் கலந்து கொள்கிறவர்கள் 10% பிணையத்தொகை வரைவோலையாக செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 2, 2025

கடலூர்: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

image

கடலூர் மக்களே இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை (9013151515) சேமிக்க வேண்டும். இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக Hi என்று ஆங்கிலத்தில் Message அனுப்பினால் போதும். அதுவே வழிகாட்டும். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணி தெரியப்படுத்துங்க…

News November 2, 2025

கடலூர்: வீட்டு வரி பெயர் மாற்ற வேண்டுமா?

image

கடலூர் மக்களே.. உங்க வீட்டு வரி பெயர் மாற்றத்திற்கு அலைச்சல் வேண்டாம். அதற்கு எளிய வழி இருக்கு! உங்க அலைச்சலை போக்க இங்கு <>க்ளிக் <<>>செய்து உங்க Add Assesment-ல் சொத்துகளை சேர்த்து பெயர் மாற்றத்தை தேர்வு செய்து சொத்து ஆவணங்களை சமர்பியுங்க. அதிகாரிகள் ஆவணங்களை சரிபார்த்த பின் வீட்டு வரி பெயர் 15-30 நாட்களில் மாறிவிடும். இத்தகவலை SHARE பண்ணுங்க.

error: Content is protected !!