News November 1, 2025

கடலில் மூழ்கி பலியான 4 பேர் குடும்பத்திற்கு தலா ₹3 லட்சம்

image

எண்ணூர், பெரியகுப்பம் கடற்கரை பகுதியில் குளித்துக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக 4 பெண்கள் கடலில் மூழ்கி உயிரிழந்தனர். இந்நிலையில், அவர்களின் குடும்பங்களுக்கு, CM ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உயிரிழந்த தேவகி, பவானி, ஷாலினி, காயத்ரி ஆகிய 4 பேரின் குடும்பத்திற்கும் தலா ₹3 லட்சம் வழங்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Similar News

News November 2, 2025

லெனின் பொன்மொழிகள்

image

*நாத்திகம் என்பது பொதுவுடைமையின் இயல்பான மற்றும் பிரிக்க முடியாத பகுதியாகும்.
*பிழைகள் மற்றும் தோல்விகள் இல்லாமல் கற்றல் ஒருபோதும் நிகழ்வதில்லை.
*நம்பிக்கை நல்லதுதான், ஆனால் கட்டுப்பாடு சிறந்தது.
*அடிக்கடி சொல்லப்படும் ஒரு பொய்க்கூட உண்மையாகிவிடுகிறது.
*பெண்ணுரிமை இல்லாத நாடு, காற்றில்லாத வீடு.
*அச்சத்தை விட ஆபத்தை ஒரு முறையாவது சந்திப்பது மேலானது.

News November 2, 2025

காந்திக்கு பிறகு மோடி தான்: RN ரவி

image

காந்திக்கு பின் இந்த நாட்டை புரிந்துகொண்ட ஒரே நபர் PM மோடி தான் என்று கவர்னர் RN ரவி கூறியுள்ளார். மோடியின் ஆட்சியில் வடகிழக்கு மாநிலங்கள் அமைதியாக உள்ளதாகவும், 25 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீண்டுள்ளதாகவும் ரவி தெரிவித்துள்ளார். குறிப்பாக, மாவோயிஸ்ட்கள் முடக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். மோடி ஆட்சிக்கு வரும் நேரத்தில், நாடு பின்தங்கி இருந்ததாகவும் கூறினார். உங்கள் கருத்து என்ன?

News November 2, 2025

நவம்பர் 2: வரலாற்றில் இன்று

image

*1834 – முதன்முதலாக இந்தியாவில் இருந்து 75 ஒப்பந்த தொழிலாளர்கள் மொரீஷியஸ் சென்றனர்
*1903 – பரிதிமாற்கலைஞர் நினைவுநாள்.
*1936 – BBC நிறுவனம், தொலைக்காட்சி சேவையை தொடங்கியது.
*1965 – ஷாருக்கான் பிறந்தநாள்.
*1995 – நிவேதா தாமஸ் பிறந்தநாள்.

error: Content is protected !!