News November 2, 2025
ஓசூர்: ஏரியில் மூழ்கி மாணவன் பலி

கிருஷ்ணகிரி, ஓசூர் அருகே, பாகலுார் அம்பேத்கர் நகரை சேர்ந்த பாண்டியன் மகன் மணிசங்கர் (13). நேற்று (நவ.01) விடுமுறை நாளையொட்டி பாகலுார் பட்டாளம்மன் ஏரிக்கு குளிக்க சென்றுள்ளார். ஆழமான பகுதிக்கு சென்ற மாணவன் மணிசங்கர், நீரில் மூழ்கி பலியானார். பின் ஓசூர் தீயணைப்புத்துறையினர் நேற்று மாலை, 4:00 மணிக்கு மாணவன் சடலத்தை மீட்டனர். மேலும் இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News November 3, 2025
கிருஷ்ணகிரி: இரவு ரோந்து பணி விவரம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று (02.11.2025) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 ஐ டயல் செய்யலாம். வீட்டில் தனியாக வசிக்கும் பெண்கள் மற்றும் முதியவர்கள் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் உடனடியாக இந்த எண்ணை தொடர்பு கொள்ளலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
News November 2, 2025
கிருஷ்ணகிரி: டிப்ளமோ/டிகிரி போதும்- ரூ.59,700 சம்பளம்!

மத்திய அரசின் PDIL நிறுவனத்தில் சிவில், கணினி, டிசைன், மெக்கானிக்கல், தீ-பாதுகாப்பு உட்பட பல பிரிவுகளில் மொத்தம் 87 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு, டிப்ளமோ/டிகிரி முடித்த 18 முதல் 40 வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும், ரூ.26,600 – ரூ.59,700 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <
News November 2, 2025
கிருஷ்ணகிரி: தேர்வு இல்லாமல் வங்கி வேலை!

கிருஷ்ணகிரி மக்களே, நபார்டு வங்கியில் (NABARD) பல்வேறு காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 12-வது தேர்ச்சி பெற்ற 18-33 வயதுகுட்பட்டவர்கள் நவ.15-க்குள் விண்ணப்பிக்கலாம். இதில் ஊதியமாக மாதம் ரூ.20,000 – ரூ.30,000 வரை வழங்கப்படும். இதற்கு தேர்வு கிடையாது. நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். விருப்பமுள்ளவர்கள் nabfins.org/Careers எனும் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்லாம்.


