News November 14, 2025

ஈரோட்டில் நடந்த கொடூர நிகழ்வு!

image

டி.என்பாளையத்தை சேர்ந்தவர் பரமேஸ்வரன் இவரது மகன் 10 வகுப்பு படித்து வருகிறார். பரமேஸ்வரன் தான் குளிக்க தண்ணீர் எடுத்து வைக்க மகனிடம் கூறியுள்ளார். மகன் பள்ளிக்குச் செல்ல தயாராகிக் கொண்டிருந்த நிலையில் ஆத்திரமடைந்த பரமேஸ்வரன் சாப்பாட்டிற்கு வைக்கப்பட்ட சுடு தண்ணீரை மகன் மீது ஊற்றியதால் மகன் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதி. இது குறித்து பங்களாபுதூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

Similar News

News November 14, 2025

ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் திருடிய நபர் கைது

image

மலையம்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புஞ்சை காளமங்கலம் ஊராட்சி எடக்காடு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இரவில் 40 மீட்டர் ஒயர் மற்றும் மின் சாதனங்களை திருடிய வழக்கில் கோவில்பாளையம் அருள்ராஜ் (46) என்பவரை மலையம்பாளையம் காவல்துறையினர் கைது செய்து கொடுமுடி கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

News November 14, 2025

ஈரோடு வீரர் தங்கம் வென்று சாதனை!

image

சென்னை நகரில் நடைபெற்ற 23ஆவது ஆசிய மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில், ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த சண்முகம் (65+ பிரிவு) இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தி சிறப்பான சாதனை புரிந்துள்ளார். 2000 மீ. ஸ்டீப்பிள் சேஸ் போட்டியில் தங்கப் பதக்கம், 10 கி.மீ. மராத்தான் மற்றும் 1500 மீ. ஓட்டப்போட்டிகளில் வெள்ளிப் பதக்கங்களை வென்று இந்தியாவிற்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளார்.

News November 14, 2025

சென்னிமலை அருகே சிக்கிய வட மாநிலத்தவர்கள்: அதிரடி கைது

image

ஈங்கூர் சிப்காட் தொழில் வளாகப் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக சென்னிமலை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது அதைத்தொடர்ந்து போலீசார் அங்கு சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த 2 பேரை பிடித்து விசாரித்த போது அவர்கள் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த பிகாஸ் பர்மன், ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ஜிதேந்திர குமார் இவர்கள் இருவரும் கஞ்சா விற்பனை செய்வது தெரிய வந்தது 5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்தனர்.

error: Content is protected !!