News December 9, 2025

இன்னும் 100 நாட்களே! யஷ் பட போஸ்டர் வைரல்!

image

யஷ் நடிப்பில் உருவாகி வரும் ‘டாக்ஸிக்’ படம் அடுத்த ஆண்டு, மார்ச் 19-ம் தேதி வெளியாக உள்ளது. படம் வெளியாக இன்னும் 100 நாட்களே உள்ளதாக கூறி படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ள நிலையில், ரசிகர்கள் அதை வைரலாக்கி வருகின்றனர். கீது மோகன் தாஸ் இயக்கத்தில் உருவாகிவரும் இந்த படத்தில் டொவினோ தாமஸ், நயன்தாரா, கியாரா அத்வானி, ருக்மினி வசந்த் என நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது.

Similar News

News December 9, 2025

ஶ்ரீரங்கம்: வைகுண்ட ஏகாதசி விழா டிச.19 தொடக்கம்

image

உலகப் பிரசித்தி பெற்ற ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி விழா சிறப்பு வாய்ந்தது. இந்த ஆண்டுக்கான விழா வரும் டிச.,19-ம் தேதி திருநெடும் தாண்டகத்துடன் தொடங்குகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பரமபத வாசல் திறப்பு எனும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி வரும் 30-ம் தேதி நடைபெற உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

News December 9, 2025

தெரு நாய்க்கடி.. பள்ளிகளுக்கு முக்கிய உத்தரவு

image

தெரு நாய்க்கடி தொடர்பாக பள்ளிகளுக்கு அரசு முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது. நாய்க்கடியால் பாதிக்கப்பட்டால் தயக்கமின்றி ஆசிரியரிடமோ, பெற்றோரிடமோ தெரிவிக்குமாறு மாணவர்களுக்கு உரிய ஆலோசனை தர அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், தெரு நாய்களுக்கு உணவு தருவது உள்ளிட்டவற்றை தவிர்க்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. நாய்க்கடியால் மக்கள் பாதிக்கப்படுவதை தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

News December 9, 2025

ஈரோடு பொதுக்கூட்டத்துக்கான தேதியை மாற்றிய தவெக

image

ஈரோட்டில் விஜய் பிரசாரம் செய்ய உள்ள இடத்தை செங்கோட்டையன் நேரில் சென்று ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதுவரை இல்லாத அளவுக்கு 84 நிபந்தனைகளை போலீசார் விதித்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் விஜய்யின் பொதுக்கூட்டம் டிச.16-ம் தேதியில் இருந்து, டிச.18-ம் தேதிக்கு மாற்றப்படுவதாகவும், 25,000 பேர் வரை அதில் பங்கேற்பார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

error: Content is protected !!