News November 1, 2025
இந்த மாதம் 7 நாள்கள் விடுமுறை… ரெடியா இருங்க!

நவம்பர் மாதத்தில் வங்கிகளுக்கு வழக்கமான விடுமுறை மட்டுமே. 5 ஞாயிற்றுக் கிழமைகளிலும் (நவ.2, 9, 16, 23, 30) வங்கிகள் இயங்காது. அதேபோல், 2-வது, 4-வது சனிக்கிழமைகளிலும் (நவ.8, 22) விடுமுறையாகும். மற்ற 23 நாள்களிலும் தமிழகத்தில் வங்கிகள் முழுநேரமும் செயல்படும். இதற்கேற்ப, கடன் தவணை செலுத்துதல், காசோலை தொடர்பான பணிகளை பிளான் பண்ணிக்கோங்க மக்களே! SHARE IT.
Similar News
News November 2, 2025
SIR-ஐ கடுமையாக எதிர்க்க வேண்டும்: திருமா

வாக்களர் பட்டியலைச் சீர்செய்வது என்பதைவிட, குடியுரிமையைக் குறிவைத்து மேற்கொள்ளப்படும் நடவடிக்கையாகவே கருதவேண்டி உள்ளதாக SIR தொடர்பான அனைத்து கட்சி கூட்டத்தில் திருமா தெரிவித்துள்ளார். அதாவது, CAA, NRC ஆகிய சட்டங்களை நடைமுறைப்படுத்தும் நோக்கில்தான் தேர்தல் ஆணையத்தை பாஜக அரசு பயன்படுத்துகிறது. எனவே, SIR நடவடிக்கையை நாம் கடுமையாக எதிர்க்க வேண்டுமென அனைத்து கட்சிகளிடமும் வலியுறுத்தினார்.
News November 2, 2025
இந்தாண்டு இறுதிக்குள் வருகிறது பறக்கும் கார்!

இந்தாண்டு இறுதிக்குள் பறக்கும் காரை அறிமுகப்படுத்தி டெமோ காட்டவுள்ளதாக SpaceX தலைவர் எலான் மஸ்க் அறிவித்துள்ளார். இந்த டெமோ நிகழ்ச்சி தொழில்நுட்ப வரலாற்றில் மறக்க முடியாத ஒன்றாக அமையும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இருப்பினும், இது பறக்கும் கார் தானா அல்லது என்னவென்பதை பொறுத்திருந்து பாருங்கள் என்றும் சஸ்பென்ஸ் வைத்துள்ளார். என்னவா இருக்கும்?
News November 2, 2025
கரூரில் வியாபாரிகளை விசாரிக்கும் CBI

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக CBI தீவிர விசாரணை நடத்தி வருகிறது. கடந்த 2 நாள்களாக விஜய் பேசிய இடத்தை அளவீடு செய்தனர். 3-வது நாளான இன்று வேலுச்சாமிபுரத்தில் உள்ள வியாபாரிகள் 8 பேரிடம் விசாரணை மேற்கொண்டனர். அவர்களுக்கு ஏற்கெனவே CBI சம்மன் அனுப்பியிருந்த நிலையில், இன்று ஆஜராகினர். 8 பேரிடம் சம்பவம் குறித்து விரிவாக கேட்டறிந்தனர்.


