News November 2, 2025
இந்த தீர்ப்பு பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க?

‘இனிமேல் இந்த மாதிரி வாழ்க்கைல எப்பவும் நினச்சி கூட பார்க்கக்கூடாது’ என்ற எண்ணம் தான் மலேசியாவைச் சேர்ந்த 35 வயது நபருக்கு தோன்றியிருக்கும். வளர்ப்பு மகள்களை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக, அவருக்கு 104 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், 18 பிரம்படி தண்டனையும் விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட தண்டனைகள் பற்றி உங்கள் கருத்து என்ன?
Similar News
News November 2, 2025
வாழ்க்கையில் ஒருமுறையாவது இங்கெல்லாம் போகணும்!

அனைவரும் கால்களில் சக்கரத்தை சுற்றிக்கொண்டு ஏதாவது ஒன்றை தேடி, ஓடிக்கொண்டே இருக்கிறோம். அப்படி ஓடும் அனைவருக்குள்ளும் இருக்கும் ஒரு ஆசை, நின்று நிதானமாக எங்கேயாவது அழகிய இடத்திற்கு சென்று ஓய்வெடுக்க வேண்டும் என்பது. வாழ்க்கையில் ஒருமுறையாவது இங்கு செல்ல வேண்டும் என்று தோன்றும். அப்படிப்பட்ட சில இடங்கள் பற்றி அறிய மேலே ஸ்வைப் பண்ணுங்க…
News November 2, 2025
தேர்தலில் வெற்றி யாருக்கு.. புதிய கருத்துக்கணிப்பு

பிஹாரில் அடுத்த வாரம் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், JVC Poll – Times Now நடத்திய தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு வெளியாகியுள்ளது. இதில், நிதிஷ் தலைமையிலான NDA கூட்டணி மீண்டும் ஆட்சியைப் பிடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 243 இடங்களில் NDA 120 – 140 வரையும், தேஜஸ்வி தலைமையிலான மகாகட்பந்தன் (MGB) 93 – 112 இடங்கள் வரையும் வெற்றிபெறும் என கணிக்கப்பட்டுள்ளது.
News November 2, 2025
சிக்கன், முட்டை விலை நிலவரம்!

ஞாயிற்றுக்கிழமையான இன்று(நவ.2) நாமக்கல் மண்டலத்தில் சிக்கன், முட்டை விலை மாற்றமின்றி விற்பனையாகிறது. மொத்த விலையில் கறிக்கோழி 1 கிலோ ₹106, முட்டைக்கோழி 1 கிலோ ₹108-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த வாரத்தில் ஏறுமுகத்திலிருந்த முட்டை, இந்த வாரத்தில் ₹5.40 ஆகவே நீடிக்கிறது. சென்னையில் 1 கிலோ கோழிக்கறி ₹160 முதல் ₹200 வரை விற்பனையாகிறது. உங்கள் ஊரில் சிக்கன் விலை என்ன? கமெண்ட்ல சொல்லுங்க.


