News November 12, 2025
இந்த எக்ஸ்பிரஸ் ரயில் மொரப்பூரில் நிற்கும்!

சென்னை, எம்ஜிஆர் சென்ட்ரல்-திருவனந்தபுரம் இடையிலான எக்ஸ்பிரஸ் ரயில் (12695, 12696) மொரப்பூரில் நின்று செல்ல பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்திருந்தனர். இந்த நிலையில், தம்பிதுரை எம்பி மத்திய ரயில்வே அமைச்சருக்கு பரிந்துரை செய்ததன் பேரில், இனி மொரப்பூர் ஸ்டேஷனில் நின்று செல்வதற்கு மத்திய அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ் உத்தரவிட்டுள்ளார்.
Similar News
News November 12, 2025
தருமபுரி: அதிரடி காட்டிய வனச்சரக அலுவலர்!

மொரப்பூர் வனச்சரக அலுவலர் அருண்பிரசாத்துக்கு கிடைத்த தகவலின் படி, வன அலுவலர்கள் நேற்று காலை செல்லம்பட்டி பீட் காவல் எல்லைக்குட்பட்ட வனப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, பொய்யப்பட்டியை சேர்ந்த சந்திரன் (62) சந்திரகாந்த் (42) ஆகியோர் அவர்களது நிலத்தில், மின்சாரம் பாய்ச்சி, வனவிலங்குகளை வேட்டையாட முயன்றது தெரிய வந்தது. இதையடுத்து, இருவருக்கும் தலா ரூ.1.25 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
News November 12, 2025
தருமபுரி: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

தருமபுரி மாவட்டம் முழுவதும் நேற்று இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் மாவட்ட காவல் துறையால் வெளியிடப்பட்டுள்ளது. காவல் கண்காணிப்பாளர் தலைமையில் ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் மற்றும் தொடர்புக்கொள்ள தொடர்பு எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 100 அல்லது 04342-233850 உதவி எண்ணை தொடர்பு கொள்ளவும். இதை அனைவருக்கும் ஷேர் செய்யவும்.
News November 11, 2025
தருமபுரி: இளைஞர்களே செம வாய்ப்பு.. மிஸ் பண்ணிடாதீங்க

தமிழ்நாட்டை சேர்ந்த 1 லட்ச மாணவர்கள் மற்றும் வேலையில்லாத இளைஞர்களுக்கு மத்திய அரசால் சான்றளிக்கப்பட்ட 100 கணினி மென்பொருள் திறன் படிப்புகள் வழங்கப்படுகிறது. இதற்கு 10,+2 தேர்ச்சி, பொறியியல், பட்டம், முதுகலை, எம்பிஏ, பாலிடெக்னிக் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் இந்த <


