News November 2, 2025
இந்தாண்டு இறுதிக்குள் வருகிறது பறக்கும் கார்!

இந்தாண்டு இறுதிக்குள் பறக்கும் காரை அறிமுகப்படுத்தி டெமோ காட்டவுள்ளதாக SpaceX தலைவர் எலான் மஸ்க் அறிவித்துள்ளார். இந்த டெமோ நிகழ்ச்சி தொழில்நுட்ப வரலாற்றில் மறக்க முடியாத ஒன்றாக அமையும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இருப்பினும், இது பறக்கும் கார் தானா அல்லது என்னவென்பதை பொறுத்திருந்து பாருங்கள் என்றும் சஸ்பென்ஸ் வைத்துள்ளார். என்னவா இருக்கும்?
Similar News
News November 3, 2025
இந்திய அணியின் வெற்றிப் பாதை

52 வருட மகளிர் உலகக் கோப்பை வரலாற்றில் இந்தியா முதல் முறையாக சாம்பியன் ஆகியுள்ளது. குரூப் ஸ்டேஜில் இலங்கை, பாகிஸ்தான், நியூசிலாந்திற்கு எதிராக வெற்றியும், தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்திற்கு எதிராக தோல்வியும் கண்ட இந்திய அணி புள்ளி பட்டியலில் 4-வது இடமே பிடித்து அரையிறுதிக்கு முன்னேறியது. இந்த தொடரில் இந்திய அணியின் வெற்றிப் பாதையை போட்டோக்களாக தந்துள்ளோம். SWIPE செய்து பார்க்கவும்.
News November 3, 2025
ஆனந்த கண்ணீரில் ரோஹித் சர்மா

மகளிர் உலகக் கோப்பை இறுதிப்போட்டியை ஹிட்மேன் ரோஹித் சர்மா நேரில் கண்டுகளித்தார். தென்னாப்பிரிக்க அணியின் இறுதி விக்கெட் விழுந்ததும் ரோஹித் சர்மா எழுந்து நின்று கைத்தட்டி வீராங்கனைகளை உற்சாகப்படுத்தியதோடு மட்டுமின்றி, அவர்களின் மகிழ்ச்சியான தருணங்களை பார்த்து ஆனந்த கண்ணீர் வடித்தார். 2023 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் ரோஹித் தலைமையிலான இந்திய அணி, ஆஸ்திரேலியா அணியிடம் தோற்றிருந்தது.
News November 3, 2025
ரத்தன் டாடா பொன்மொழிகள்

*சிறந்த வேலை செய்ய ஒரே வழி நீங்கள் செய்யும் வேலையை நேசிப்பது தான். *வேகமாக நடக்க விரும்பினால் தனியாக நட. ஆனால் நீண்ட தூரம் நடக்க விரும்பினால், பிறருடன் ஒன்றாக நட. *நல்ல சேவையை வழங்கினால், நல்ல வியாபாரம் கிடைக்கும் என்று நான் நம்புகிறேன். *எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சிறப்பாகவும், சரியாகவும் செயல்பட வேண்டும். அதில் சமரசம் செய்துகொள்ள கூடாது.


