News November 13, 2025
ஆண்களுக்கு எச்சரிக்கை… இதை செய்யாதீங்க!

இந்தியாவில் ஆணுறுப்பு காஸ்மெடிக் சிகிச்சை தற்போது பிரபலமாகி வருகிறது. ஆணுறுப்பின் தடிமனை அதிகரிக்க, அளவை கூட்ட Penis filler என்ற ஜெல், உறுப்பின் தோலுக்குள் செலுத்தி இந்த சிகிச்சை அளிக்கப்படும். ஒரு செஷனுக்கே ₹70,000- ₹2,00,000 செலவாகும் இந்த சிகிச்சையை செய்துகொள்ள 25-45 வயதினர் ஆர்வம் காட்டுகின்றனராம். இதனால் பக்கவிளைவுகள், ரிஸ்க் அதிகம் எனக் கூறப்படுகிறது. ஆகவே, டாக்டரிடம் ஆலோசித்து செயல்படவும்.
Similar News
News November 13, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (நவ.13) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.
News November 13, 2025
அர்ஜுன் டெண்டுல்கரை கழற்றிவிட்ட மும்பை?

சஞ்சு சாம்ஸன்-ஜடேஜா டிரேடிங்கை தொடர்ந்து, வேறு சில அணிகளும் வீரர்களை பரிமாற்றிக் கொள்ள முயற்சிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் நிர்வாகம் சர்துல் தாக்கூரை அவரது அடிப்படை ஏலத் தொகையான ₹2 கோடிக்கு மும்பை அணிக்கு டிரேட் செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதற்கு மாற்றாக வேகப்பந்து வீச்சாளரான அர்ஜுன் டெண்டுல்கரை பெற்றுள்ளதாகவும் ஐபிஎல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
News November 13, 2025
இது ஐபோன் பாக்கெட்.. ₹26,000 மட்டுமே

ஐபோன்களை எளிதில் எடுத்துச் செல்வதற்காக ஆப்பிள் நிறுவனம் கலர் கலரான பைகளை அறிமுகம் செய்துள்ளது. fabric பயன்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ள அந்த பையில் ஐபோனை வைத்து கை, தோளில் மாட்டிக்கொள்ளலாம் என ஆப்பிள் நிறுவனம் கூறியுள்ளது. இதன் விலை இந்திய மதிப்பின்படி ₹26,000 மட்டுமே ஆகும். இது பார்ப்பதற்கு பாட்டி காலத்து சுருக்கு பை போல் இருப்பதாக நெட்டிசன்கள் கிண்டல் செய்கின்றனர்.


