News November 29, 2025

அரியலூர் மாவட்டம் ரோந்து பணி செல்லும் காவலர்கள் விவரம்

image

அரியலூர் மாவட்டத்தில், (நவ.28) இரவு முதல் மறுநாள் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்.

Similar News

News December 2, 2025

அரியலூர்: மழையின் காரணமாக 63 வீடுகள் சேதம்

image

அரியலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே மிதமானது முதல் கனமழை பெய்து வந்தது. இந்த மழையின் காரணமாக அரியலூர் மாவட்டத்தில் 32 குடிசை வீடுகள் பகுதி அளவும், 31 காரை வீடுகள் பகுதியளவும் சேதமடைந்துள்ளதாகவும், அதன்படி மொத்தமாக 63 வீடுகள் சேதமடைந்துள்ளதாக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் இன்று தகவல் தரப்பட்டுள்ளது. மேலும் திருமானூரில் மட்டும் நேற்று 3.2 மி.மீ மழைப்பதிவாகி உள்ளது.

News December 2, 2025

அரியலூர்: காணாமல் போன சிறுமிகள் ஒப்படைப்பு

image

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள தளவாய் பகுதியை சேர்ந்த சிறுமிகள் இரண்டு பேர் வீட்டில் சண்டையிட்டு வெளியில் சென்றுள்ளனர். இதனையடுத்து பெற்றோர்கள் தளவாய் காவல் நிலையத்தில், புகார் அளித்ததின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் அரியலூர் எஸ்.பி விஷ்வேஸ் பா.சாஸ்திரி உத்தரவின்பேரில், கடந்த 30ஆம் தேதி சிறுமிகளை தேடும் பணியில் ஈடுபட்டு, சிறுமிகளை பத்திரமாக மீட்டு பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர்.

News December 2, 2025

அரியலூர்: முதன்மை நீதிபதி முக்கிய அறிவிப்பு!

image

அரியலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் சட்டப்பணிகள் ஆணை குழுவிற்கு, தன்னார்வலர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். அதன்படி 50 தன்னார்வலர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாகவும், விருப்பமுள்ளவர்கள் http://ariyalur.dcourts.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தினை, பூர்த்தி செய்து சட்ட பணிகள் ஆபிசில் நேரடியாக டிசம்பர் 16ஆம் தேதிக்குள் வழங்கலாம் என மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி மலர்வாலன்டினா தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!