News November 2, 2025

அரியலூர்: மானியத்துடன் மின்மோட்டார் வேண்டுமா?

image

அரியலூர் மக்களே, விவசாயிகளுக்கு 50% மானியத்துடன் கூடிய மின்மோட்டார் மற்றும் பம்புசெட்டுகள் பெறுவதற்கு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. புதிதாக வாங்கப்படும் மின் மோட்டார்களின் மொத்த விலையில் ரூ.15,000/-அல்லது 50% மானியமாக வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க <>இங்கே <<>>கிளிக் செய்து Apply செய்யவும். மேலும் விபரங்களுக்கு வட்டார வேளாண்மைப் பொறியியல் துறை அலுவலகத்தை நேரில் அணுகவும். தகவலை ஷேர் பண்ணுங்க!

Similar News

News November 3, 2025

அரியலூர்: இரவு ரோந்து காவலர்களின் விபரம்

image

அரியலூர் மாவட்டம், முழுவதும் இரவு நேரங்களில் குற்ற சம்பவங்களை தடுப்பதற்கும் குற்றவாளிகளை பிடிப்பதற்கும் தினந்தோறும் இரவு ரோந்து பணிக்கு காவலர்கள் செல்வது வழக்கம். அதன்படி (நவ.02) இரவு ரோந்து பணிக்கு செல்லும் காவலர்களின் பெயர்கள் மற்றும் தொலைபேசி எண்களை வெளியிடப்பட்டுள்ளது. அவசர காலத்தில் மேலே கொடுக்கப்பட்டுள்ள எண்ணை அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யவும். இத்தகவலை ஷேர் செய்யுங்கள்!

News November 3, 2025

அரியலூர்: குறைதீர் நாள் கூட்டம் அறிவிப்பு

image

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் (நவ.3) நாளை நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப் பட்டா, மாற்றுத்திறனாளி உதவித்தொகை, தொழில்கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்கள், பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News November 2, 2025

அரியலூர்: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

image

அரியலூர் மக்களே இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை (9013151515) சேமிக்க வேண்டும். இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக Hi என்று ஆங்கிலத்தில் Message அனுப்பினால் போதும். அதுவே வழிகாட்டும். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணி தெரியப்படுத்துங்க.

error: Content is protected !!