News November 12, 2025

அனைத்து ஆண்களுக்கும் மாதம் ₹1,000? CLARITY

image

தமிழகத்தில் ஆண்களுக்கு மாதந்தோறும் அரசு ₹1,000 வழங்குவதாக கூறி, குறிப்பிட்ட APP-ஐ டவுன்லோடு செய்ய சொல்லி செய்திகள், காணொலிகள் சமூகவலைதளங்களில் பரவி வருகின்றன. ஆனால், இது முற்றிலும் வதந்தி என அரசின் TN Fact Check மறுப்பு தெரிவித்துள்ளது. தமிழ் புதல்வன் திட்டத்தில், அரசு பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்று, உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு மட்டுமே மாதம் ₹1,000 வழங்கப்படுவதாகவும் விளக்கம் அளித்துள்ளது.

Similar News

News November 12, 2025

டெல்லி கார் வெடிப்பு: NIA-க்கு அமித்ஷா புதிய உத்தரவு

image

டெல்லி குண்டுவெடிப்பு சம்பவத்தின் விசாரணை காவல்துறையிடம் இருந்து NIA-விற்கு நேற்று மாற்றப்பட்டது. இதனையடுத்து NIA அனைத்து கோணங்களிலும் விசாரித்து வருகிறது. இதனிடையே வழக்கின் விசாரணை அறிக்கையை விரைவில் தாக்கல் செய்ய உள்துறை அமைச்சர் அமித்ஷா உத்தரவிட்டுள்ளார். அதேபோல், சம்பவம் நடைபெற்ற இடத்தில் இருந்து எடுக்கப்பட்ட சாம்பிள்களை தீவிரமாக ஆய்வு செய்ய தடயவியல் குழுவுக்கும் அறிவுறுத்தியுள்ளார்.

News November 12, 2025

மீண்டும் இபிஎஸ் உடன் இணைகிறார்களா?

image

தவெக கூட்டணிக்கு வராத நிலையில், OPS, TTV, செங்கோட்டையனை கூட்டணியில் சேர்க்க EPS-க்கு பாஜக அழுத்தம் கொடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முதலில் மறுத்த EPS, பின்னர் கள சூழலை புரிந்து, கூட்டணியில் சேர்க்க, ஒரு கண்டிஷனை போட்டுள்ளாராம். அம்மூவரும் தனி சின்னத்தில் போட்டியிட்டுக் கொள்ளலாம் என நிபந்தனை விதித்துள்ளாராம். இதற்கு பாஜக உள்பட சம்பந்தப்பட்டவர்கள் ஓகே சொல்லுவார்களா?

News November 12, 2025

பள்ளிகளுக்கு 2 நாள்கள் கூடுதல் விடுமுறையா?

image

2026-ம் ஆண்டுக்கான பொது விடுமுறை பட்டியலை அரசு நேற்று வெளியிட்டது. இதில், ஜன.15 பொங்கல், ஜன.16 திருவள்ளுவர் தினம், ஜன.17 உழவர் திருநாள் ஆகிய 3 நாள்கள் மட்டுமே விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மாணவர்கள், பொதுமக்கள் பொங்கலுக்கு சொந்த ஊர் செல்ல ஏதுவாக ஜன.13 & போகி பண்டிகையான ஜன.14-ம் தேதியும் கூடுதல் விடுமுறை அளிக்க கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து அரசு பரிசீலனை செய்யும் என தெரிகிறது.

error: Content is protected !!