News November 27, 2025
‘அஞ்சான் 2’ சம்பவம் இருக்கு.. லிங்குசாமி கொடுத்த அப்டேட்

சூர்யாவின் ‘அஞ்சான்’ நவ.28ம் தேதி ரீ-ரிலீசாகும் நிலையில், இயக்குநர் லிங்குசாமி ‘அஞ்சான் 2’ அப்டேட் கொடுத்துள்ளார். படத்தில் இருந்த தவறுகளை சரிசெய்தே Re-edited வெர்ஷனை ரிலீஸ் செய்வதாக அவர் கூறியுள்ளார். சூரியின் அனைத்து காட்சிகளும் நீக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், ரீ-ரிலீசிற்கு வரவேற்பு கிடைக்கும் பட்சத்தில் சூர்யாவிடம் பேசி ‘அஞ்சான் 2’ பற்றி முடிவெடுக்கப்படும் என்றும் அவர் பேசியுள்ளார்.
Similar News
News December 2, 2025
பாமகவை மீட்க குழு அமைத்தார் ராமதாஸ்

அன்புமணிதான் பாமகவின் தலைவர் என்று ECI கூறிவிட்டது. இந்நிலையில், அன்புமணி வசம் சென்ற பாமகவை மீட்பதற்காக ஜி.கே.மணி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளதாக ராமதாஸ் அறிவித்துள்ளார். நீதிமன்றங்களில் சட்ட போராட்டங்களை நடத்தும் பணியை இக்குழு மேற்கொள்ளும் எனக் கூறிய ராமதாஸ், கட்சித் தொண்டர்கள் சோர்வடைய வேண்டாம்; கட்சி மற்றும் தேர்தல் பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
News December 2, 2025
‘Word of the Year’ இது தான்!

2025-ம் ஆண்டின் ’Word of the Year’ ஆக ‘Rage bait’ என்ற வார்த்தையை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தேர்வு செய்துள்ளது. aura farming, biohack உள்ளிட்ட வார்த்தைகளும் இப்பட்டியலில் இடம்பெற்றிருந்தன. இறுதியாக, பொதுமக்களிடம் நடத்திய வாக்கெடுப்பின் அடிப்படையில் Rage bait தேர்வு செய்யப்பட்டுள்ளது. வியூஸ்களை அதிகரிக்க கோபம், வெறுப்பை தூண்டும் வகையில் உருவாக்கப்படும் SM கன்டென்ட் Rage bait எனப்படுகிறது.
News December 2, 2025
BREAKING: வரலாறு காணாத சரிவு.. மிகப்பெரிய தாக்கம்

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் சரிவைக் கண்டுள்ளது. நேற்று 34 காசுகள் சரிந்த நிலையில், இன்றும் 31 காசுகள் சரிந்து ₹89.92 ஆக உள்ளது. இதனால், கச்சா எண்ணெய் உள்ளிட்ட இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு அதன் நிறுவனங்கள் கூடுதல் செலவு செய்ய நேரிடும் என்பதால், விலைவாசி உயர வாய்ப்புள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர்.


