News August 21, 2024

நெல்சன் மனைவி அக்கவுண்டில் ₹75 லட்சம் டிரான்ஸ்ஃபர்?

image

இயக்குநர் நெல்சன் மனைவி அக்கவுண்டிலிருந்து ₹75 லட்சம் பரிவர்த்தனை நடந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், நேற்று அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதைத் தொடர்ந்து அவரது வங்கிக் கணக்கை ஆய்வு செய்ததில், ₹75 லட்சம் டிரான்ஸ்ஃபரானதாக தெரிகிறது. இந்த தொகை, ஆம்ஸ்ட்ராங்க் கொலைக்காக வழங்கப்பட்டதா என்ற கோணத்தில் போலீஸ் விசாரிப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Similar News

News January 15, 2026

நெல்லை: இலவச GAS அடுப்பு + சிலிண்டர் வேண்டுமா?

image

நெல்லை மாவட்ட மக்களே, மத்திய அரசின் உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு அடுப்பு, கேஸ், ரெகுலேட்டர், குழாய், சிலிண்டர் என அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் புகைப்படத்துடன் உங்கள் அருகில் உள்ள கேஸ் நிறுவங்களுக்கு நேரில் சென்றோ அல்லது இங்கே <>க்ளிக் <<>>செய்து இணையம் மூலமாக விண்ணப்பிக்கலாம். SHARE பண்ணுங்க!

News January 15, 2026

துர்கா ஸ்டாலினுடன் ஜாய் கிரிசில்டா

image

பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் தான், தன் குழந்தையின் தந்தை என்பதை நிரூபிக்க கோர்ட் படியேறி ஜாய் கிரிசில்டா போராடி வருகிறார். முன்னதாக, CM ஸ்டாலினை அப்பா என குறிப்பிட்டு, எனக்கு நீதி பெற்றுத் தாருங்கள் எனக் கோரியிருந்தார். இந்நிலையில் CM ஸ்டாலினிடம் இருந்து இன்று ₹100 பொங்கல் படி பெற்றதாகவும், துர்கா அம்மாவை நேரில் சந்தித்து ஆசி பெற்றதாகவும் கூறி போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.

News January 15, 2026

சற்றுமுன்: ‘விஜய் உடன் பொங்கல்’

image

டெல்லியில் PM மோடி பங்கேற்ற பொங்கல் விழாவில் ‘பராசக்தி’ படக்குழுவினர் பங்கேற்றதை காங்., விமர்சித்து வருகிறது. இந்நிலையில், விஜய் ஒரு நடிகராக இருந்திருந்தால் அவரையும் இந்த விழாவிற்கு அழைத்திருப்போம் எனத் தமிழிசை கூறியுள்ளார். மேலும், ‘ஜன நாயகன்’ ரிலீஸாகும் போதே தங்களுக்கு பொங்கல் என விஜய் ரசிகர்கள் கூறிவிட்டதால், அப்போது அவர்களுடன் சேர்ந்து நாமும் பொங்கல் கொண்டாடுவோம் என தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!