News October 19, 2025
₹5,000.. அறிவித்தது தமிழக அரசு

வடகிழக்கு பருவமழை 2 நாளுக்கு முன் தொடங்கியுள்ளது. மழைக்காலங்களில் உப்பு உற்பத்திப் பணிகள் பாதிக்கப்படும் நேரத்தில் உப்பளத் தொழிலாளர்கள் மாற்றுப் பணி ஏதுமின்றி வருவாய் இல்லாமல் கடும் சிரமத்தை சந்திக்கிறார்கள். இதனால், அவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படுகிறது. இந்நிலையில், உப்பளத் தொழிலாளர்கள் குடும்பங்களுக்கு ₹5,000 வழங்கப்படுவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 13, 2025
பாகிஸ்தானில் மகாபாரத, சமஸ்கிருத படிப்புகள்

பாகிஸ்தான் வரலாற்றில் முதல்முறையாக சமஸ்கிருத இலக்கிய படிப்பு, லாகூர் பல்கலைகழகத்தில் (LUMS) கற்பிக்கப்பட தொடங்கியுள்ளன. இதோடு சேர்த்து பகவத் கீதை, மகாபாரதத்தின் சில முக்கிய பகுதிகளும் மாணவர்களுக்கு கற்பிக்கப்படுகின்றன. இதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வரும் பேராசிரியர் ஷாகித் ரஷீத், அடுத்த 10-15 ஆண்டுகளில் பாகிஸ்தானில் இருந்து பகவத் கீதை, மகாபாராத அறிஞர்கள் வெளிவருவார்கள் என தெரிவித்துள்ளார்.
News December 13, 2025
இன்றைய நல்ல நேரம்

▶டிசம்பர் 13, கார்த்திகை 24 ▶கிழமை: சனி ▶நல்ல நேரம்: 7:45 AM – 8:45 AM & 4:45 PM – 5:45 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM & 9:30 PM – 10:30 PM ▶ராகு காலம்: 9:00 AM – 10:30 AM ▶எமகண்டம்: 1:30 PM – 3:00 PM ▶குளிகை: 6:00 AM – 7:30 AM ▶திதி: நவமி ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர்.
News December 13, 2025
2 போட்டிகளை வைத்து கில்லை எடை போட முடியாது: நெஹ்ரா

SA-க்கு எதிரான டி20 தொடரில் கில் சொதப்பி வருகிறார். இது குறித்து GT கோச் நெஹ்ராவிடம் கேட்டபோது, டி20 போன்ற மிக குறுகிய ஃபார்மெட்டில், 2 போட்டிகளில் விளையாடுவதை வைத்து ஒரு வீரரை எடை போட கூடாது என தெரிவித்துள்ளார். கில் சரியாக ஆடவில்லை என சாம்சன், அவரும் ஆடவில்லை என ருதுராஜ் என வீரர்களை தொடர்ந்து மாற்றிக் கொண்டே இருக்க முடியாது என்றும் நெஹ்ரா கூறியுள்ளார்.


