News August 7, 2024
2 வாரங்களில் சவரனுக்கு ₹3,960 சரிவு

ஜூலை 22இல் ஒரு கிராம் தங்கம் ₹6,825ஆகவும், சவரன் தங்கம் விலை ₹54,600ஆகவும் இருந்தது. அதற்கடுத்த நாள், மக்களவையில் தாக்கலான பட்ஜெட்டில் தங்கம் மீதான சுங்க வரி குறைக்கப்பட்டதையடுத்து, விலை குறையத் தொடங்கியது. இதன்படி, கடந்த 2 வாரங்களில் தங்கம் விலை கிராமுக்கு ₹495 குறைந்துள்ளது. இதேபோல், சவரன் தங்கம் விலை 2 வாரங்களில் ₹3,960 சரிந்துள்ளது. குறிப்பாக கடந்த 2 நாள்களில் ₹1,120 குறைந்துள்ளது.
Similar News
News November 13, 2025
திருச்சி: பசுமை பாரதம் நிறுவனத்தில் வேலை

திருச்சி மாநகரில் அமைந்துள்ள ‘PASUMAI BHARATHAM AGRI SOLUTIONS’ நிறுவனத்தில் காலியாக உள்ள FIELD OFFICER பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஏதேனும் டிகிரி அல்லது டிப்ளமோ முடித்த, 21-30 வயதுக்குட்பட்ட ஆண்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.15,000 முதல் ரூ.25,500 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள்<
News November 13, 2025
விஜயகாந்த் வீட்டில் போலீஸ் குவிப்பு.. பதற்றம் உருவானது

சமீப காலமாக, அரசியல்வாதிகள், சினிமா பிரபலங்கள் ஆகியோரின் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் வந்துகொண்டே இருக்கின்றன. இன்று, பிரேமலதா விஜயகாந்த் வீட்டுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டதால், போலீஸ் குவிக்கப்பட்டு அங்கு சோதனை நடைபெற்றது. ஆனால் இது புரளி என்பது சோதனையில் தெரியவந்தது. ரஜினி, ரம்யா கிருஷ்ணன், KS ரவிக்குமார், சாக்ஷி உள்ளிட்டோர் வீடுகளுக்கும் இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.
News November 13, 2025
ONGC-ல் வேலை.. விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

ONGC-ல் காலியாக உள்ள 2,623 Apprentice பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 18- 24 வயதுக்குட்பட்ட 10-வது, 12-வது, ITI, டிகிரி முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். Merit List & Certificate Verification மூலம் தேர்ச்சி நடைபெறும். ₹8,200- ₹12,300 வரை மாதச்சம்பளம் வழங்கப்படும். முழு விவரங்களுக்கு <


