News August 8, 2024

தோல்வியடைந்தாலும் ₹25,00,000 பரிசு

image

பஞ்சாபில் உள்ள லவ்லி புரொபஷனல் பல்கலைக்கழகம் (LPU) மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்துக்கு ₹25 லட்சம் வெகுமதி அறிவித்துள்ளது. வினேஷ் பதக்கம் வென்றதாகவே கருதப்படுவார் என்று கூறிய அப்பல்கலைக்கழக வேந்தர், அவரது அர்ப்பணிப்பு, திறமை அங்கீகாரத்திற்கு தகுதியானது என பாராட்டினார். ஒலிம்பிக்ஸில் தங்கம் வென்றால் ₹50 லட்சம், வெள்ளிக்கு ₹25 லட்சம், வெண்கலத்திற்கு ₹10 லட்சம் வழங்கப்படும் என்று LPU அறிவித்தது.

Similar News

News December 7, 2025

சற்றுமுன் அதிரடி கைது

image

திமுக முன்னாள் எம்பி ஏ.கே.எஸ்.விஜயனின் தஞ்சை வீட்டில் கடந்த வாரம் 300 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து, கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைத்து போலீசார் தீவிரமாக தேடுதல் வேட்டையில் இறங்கினர். இந்நிலையில், தருமபுரியை சேர்ந்த ரசூல், சாதிக் பாஷா, மொய்தீன், பர்வீன் ஆகியோரை போலீசார் கைது செய்து, 87 சவரன் நகைகளை மீட்டுள்ளனர். மீதமுள்ள நகைகள் குறித்து விசாரணை நடைபெறுகிறது.

News December 7, 2025

அரசியலில் குதிக்கிறாரா விஜய் சேதுபதி?

image

’சீக்கிரமே ஓட்டு கேட்டு வரேன்’ என Bigg Boss-ல் கூறியிருந்தார் விஜய் சேதுபதி. இதனால் அவர் அரசியலுக்கு வரப்போகிறாரா என SM-ல் கேள்வி எழுந்தது. ஆனால், அந்த நோக்கத்தில் அவர் அதை சொல்லவில்லை. சனிக்கிழமை எபிசோடில் VJS-யிடம் BB Contestants பற்றி ஆடியன்ஸ் புகார் வைத்தனர். இதை கேட்ட VJS, ‘ஏதோ தொகுதி மக்களிடம் குறை கேட்டு வந்தது போல் இருப்பதாகவும், சீக்கிரமே ஓட்டு கேட்டு வரேன்’ எனவும் காமெடியாக சொன்னார்.

News December 7, 2025

தர்மம் மீண்டும் வெல்லும்: ராமதாஸ்

image

<<18492965>>PMK உள்கட்சி<<>> விவகாரத்தில் தலையிட EC-க்கு அதிகாரம் இல்லை என டெல்லி HC தெரிவித்தது. இந்நிலையில், 46 ஆண்டுகள் உழைத்து வளர்த்த பாமகவை, என்னிடம் இருந்து பறிக்க செய்த சதி முறியடிக்கப்பட்டுள்ளதாக ராமதாஸ் தெரிவித்துள்ளார். வரும் தேர்தலில் கட்சியின் அங்கீகாரத்தை மீட்பேன் என்று கூறியுள்ள அவர், தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், தர்மம் மீண்டும் வெல்லும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!