News November 3, 2025
₹20 லட்சம்…உடனே அப்ளை பண்ணுங்க!

பள்ளி மாணவர்கள், இளங்கலை, முதுகலை, மருத்துவம், IIT, IIM & வெளிநாட்டில் உயர்கல்வி பயில்பவர்களுக்கு ₹15,000-₹20 லட்சம் வரை Platinum Jubilee Asha Scholarship-ஐ SBI வழங்குகிறது . இதற்கு, குடும்ப ஆண்டு வருமானம், பள்ளி மாணவர்களுக்கு ₹3 லட்சம், மற்றவர்களுக்கு ₹6 லட்சத்துக்கு மிகாமலும் இருக்க வேண்டும். இதில் பயனடைய sbiashascholarship.co.in – ல் நவ.15-க்குள் விண்ணப்பியுங்கள். அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
Similar News
News November 17, 2025
கால்பந்து உலகக் கோப்பைக்கு போர்ச்சுகல் அணி தகுதி

2026 கால்பந்து உலகக் கோப்பைக்கான தகுதி சுற்றில் போட்டியில் நேற்று போர்ச்சுகல் அணி அர்மேனியாவை எதிர்கொண்டது. இதில் தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடி போர்ச்சுகல் அடுத்தடுத்து கோல் மழை பொழிந்தது. இதனால் 9 – 1 என்ற கணக்கில் இமாலய வெற்றி பெற்று உலகக் கோப்பை தொடருக்கு அந்த அணி தகுதி பெற்றது. கடந்த போட்டியில் ரெட் கார்டு பெற்றதால் நட்சத்திர வீரர் ரொனால்டோ இந்த போட்டில் பங்கேற்க முடியவில்லை.
News November 17, 2025
வரலாற்றில் இன்று

1920 – நடிகர் ஜெமினி கணேசன் பிறந்ததினம்
1928 – விடுதலை போராட்ட வீரர் லாலா லஜபதி ராய் மறைந்த தினம்
1972 – நடிகை ரோஜா செல்வமணி பிறந்த தினம்
1982 – முன்னாள் கிரிக்கெட் வீரர் யூசுப் பதான் பிறந்தநாள்
1993 – நைஜீரியாவில் ராணுவப் புரட்சி மூலம் ஆட்சி கவிழ்க்கப்பட்டது.
News November 17, 2025
நடிகை அதிதி ராவ் பெயரில் வாட்சப்பில் மோசடி

நடிகர் சித்தார்த்துடனான திருமணத்துக்கு பின் நடிகை அதிதி ராவ் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருக்கிறார். இந்நிலையில் அவரது பெயரை பயன்படுத்தி, வாட்சப்பில் ஒரு நபர் போட்டோகிராபர்களை தொடர்பு கொண்டு போட்டோஷூட் பற்றி பேசி மோசடியில் ஈடுபடுவதாக இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். மேலும் தனது டீம் மூலமாகத்தான் அனைத்தையும் செய்வதாகவும், இதுபோன்ற நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவும் அதிதி கேட்டுக்கொண்டுள்ளார்.


