News August 23, 2025
விபத்தில் உயிரிழந்தால் ₹2 லட்சம்: CM ஸ்டாலின்

நிலமற்ற வேளாண் தொழிலாளர்களுக்கான விபத்து மரண இழப்பீட்டுத் தொகை ₹1 லட்சத்திலிருந்து ₹2 லட்சமாக உயர்த்தி வழங்கிட CM ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதை தவிர, விபத்தினால் ஏற்படும் உடல் உறுப்பு இழப்பிற்கு ₹1 லட்சம் என்றும், இயற்கை மரணத்துக்கு ₹30,000 என்றும், இறுதிச்சடங்குக்கான நிதியுதவி ₹10,000 வழங்கிட CM ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
Similar News
News January 22, 2026
ஜன நாயகன் படத்தில் அந்த மாதிரியான விஷயம் இல்லை

‘ஜன நாயகன்’ படத்தில் தணிக்கை வாரியம் நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு எந்த பிரச்னையும் இல்லை என ஹெச்.வினோத்தின் நண்பரும், இயக்குநருமான இரா.சரவணன் தெரிவித்துள்ளார். திரைக்கதை விவாதத்தின்போது தானும் உடனிருந்ததாக கூறிய அவர், ஜன நாயகன் திரைப்படம் ‘பகவந்த் கேசரி’ படத்தை தழுவினாலும், தணிக்கையில் சிக்கல் ஏற்படாத வகையில் மாற்றங்களை செய்ய வேண்டும் என்பதில் வினோத் தெளிவாக இருந்தார் எனவும் கூறினார்.
News January 22, 2026
குழப்பத்தை உண்டாக்க அதிமுக முயற்சி: எ.வ.வேலு

ஆளுநர் உரையின் மீதான விவாதத்தில் தங்களை பேச அனுமதிக்கவில்லை என கூறி <<18923157>>அதிமுகவினர் <<>> சட்டபேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இந்நிலையில், சட்டப்பேரவையின் நடைமுறைகளை மாற்றி, அதிமுகவினர் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சித்து வருவதாக எ.வ.வேலு குற்றம்சாட்டியுள்ளார். அதிமுக ஆட்சியிலும் ஆளுநர் உரையின் மீதான விவாதத்தின் போது கவன ஈர்ப்பு தீர்மானங்கள் எடுத்துக் கொள்ளப்பட்டதில்லை எனவும் சுட்டிக்காட்டினார்.
News January 22, 2026
அஜித் குமார் மரணம்.. புதிய தகவல் வெளியானது

கோயில் காவலாளி அஜித் குமார், போலீசாரால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் தமிழகத்தை உலுக்கியது. இவ்வழக்கில் சிறையில் இருக்கும் காவலர்கள் தற்போது ஜாமின் கோரி மதுரை ஐகோர்ட்டை நாடியுள்ளனர். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ஜாமின் வழங்க ஐகோர்ட் மறுப்பு தெரிவித்தது. மேலும், நிகிதாவின் நகை திருட்டு வழக்கின் நிலை குறித்து சிபிஐ விசாரணை அதிகாரி விளக்கம் அளிக்கவும் உத்தரவிட்டுள்ளது.


