News August 5, 2025

₹17,000 கோடி லோன் மோசடி: ED வலையில் அனில் அம்பானி

image

லோன் மோசடி வழக்கில், அனில் அம்பானி இன்று ED விசாரணைக்கு ஆஜரானார். ₹17,000 கோடி மோசடி தொடர்பாக அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. யெஸ் வங்கி உள்ளிட்ட வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களிடம் சுமார் ₹78,000 கோடி அளவுக்கு மோசடி செய்யப்பட்டு, அந்தப் பணம் வேறு வழிகளில் திருப்பிவிடப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த பணமெல்லாம் எங்கு சென்றிருக்கும்?

Similar News

News November 14, 2025

வி.சேகர் இயக்கிய திரைப்படங்கள் PHOTOS

image

இயக்குநர் வி.சேகர், 1990-2000 வரையிலான காலங்களில் 15க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளார். இவரது படங்கள் அனைத்துமே, குடும்பம் பிண்ணனி கொண்ட கதைகள். இந்த படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது. இவரது, சில ஹிட் படங்களின் பெயரை, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இந்த படங்களை இயக்கியவர் இவரா என்று ஆச்சரியப்படுவீர்கள். SHARE

News November 14, 2025

ECI மீதான நம்பிக்கை மக்களுக்கு அதிகரித்துள்ளது: PM

image

பிஹாரில் மாவோயிஸ்ட் ஆதிக்கம் அதிகமாக இருந்த போது மக்கள் வாக்களிக்கவே அச்சப்பட்டதாக மோடி தெரிவித்துள்ளார். RJD-யின் காட்டாச்சியில் வாக்குச்சாவடியில் வெளிப்படையாக வன்முறை நடக்கும் என்றும், வாக்கு பெட்டிகள் திருடப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஆனால் இன்று மக்கள் அச்சமின்றி வாக்களித்துள்ளதாகவும், ECI-ன் மீது மக்கள் முன்பைவிட நம்பிக்கை அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

News November 14, 2025

பிஹார் தேர்தல்: MY-ஐ வீழ்த்திய WE

image

பிஹார் தேர்தலில் முஸ்லிம்(M), யாதவ்(Y) சமூகங்கள் அடங்கிய MY வாக்காளர்களை மட்டுமே ஆர்ஜேடி-காங்., குறிவைத்த நிலையில், பெண்கள் (W), மிகப்பிற்படுத்தப்பட்டோர் (EBC) பிரிவினர் அடங்கிய WE வாக்காளர்களை குறிவைத்து NDA வெற்றியை வசப்படுத்தியுள்ளது. பெண்களுக்கான ₹10,000 டெபாசிட் உள்ளிட்ட திட்டங்கள், EBC பிரிவினருக்கான பல்வேறு சிறப்பு சமூகநலத் திட்டங்கள், தலித்கள் ஆதரவு ஆகியவை WE ஆதரவை NDA-வுக்கு திருப்பியது.

error: Content is protected !!