News August 22, 2025
₹1,000 மகளிர் உரிமைத் தொகை.. தமிழக அரசு புதிய தகவல்

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் புதிதாக சுமார் 15 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். உங்களுடன் ஸ்டாலின் முகாம் தொடங்கிய (ஜூலை 15) முதல் வாரத்தில் விண்ணப்பித்தவர்களின் நிலை குறித்து ஆகஸ்ட் 28-ம் தேதி விவரங்கள் வெளியாகும் என அரசு தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், புதிதாக திட்டத்தில் இணைபவர்களுக்கு பணம் வரவு வைப்பது தொடர்பான அறிவிப்பை செப். 15-ல் அரசு வெளியிடும் என்றும் கூறப்படுகிறது.
Similar News
News January 25, 2026
திருச்சி: கொலை வழக்கில் நான்கு பேர் கைது

திருச்சி மாவட்டம், புத்தாநத்தம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட காவல்காரன்பட்டியைச் சேர்ந்த சிவசுப்பிரமணியன் என்பவர், கடந்த 19ஆம் தேதி வீட்டில் உறங்கிய நிலையில் மர்மமான முறையில் காயங்களுடன் இறந்து கிடந்தார். இது தொடர்பான வழக்கில் குற்றவாளிகள் 4 பேரை புத்தாநத்தம் காவல் துறையினர், இன்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். துரிதமாக செயல்பட்ட காவலர்களை திருச்சி மாவட்ட எஸ்பி பாராட்டினார்.
News January 25, 2026
வேளச்சேரி – பரங்கிமலை ரயில் சேவை அடுத்த மாதம் துவக்கம்

பல ஆண்டுகளாகக் கிடப்பில் இருந்த வேளச்சேரி – பரங்கிமலை இடையேயான பறக்கும் ரயில் சேவை திட்டம், தற்போது நிறைவுப் பகுதியை எட்டியுள்ளது. இந்த நிலையில், இந்த ரயில் சேவை அடுத்த மாதம் முதல் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வரும் என ரயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பொங்கலுக்கு பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்த்த நிலையில், சில நிர்வாகக் காரணங்களால் இவ்வழி தடத்தில் ரயில் சேவை தாமதமானது.