News January 10, 2025

ஓய்வுபெற்ற கோயில் பணியாளர்களுக்கு ₹1000

image

இந்து சமய அறநிலையத்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு பொங்கல் கருணைத் தொகையாக ₹1000 வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் அளிக்கப்படும் நிலையில் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு அது கிடைக்கப் பெறுவதில்லை. ஆகையால், ஓய்வு பெற்று துறைநிலை ஓய்வூதியம் பெறும் கோயில் பணியாளர்களுக்கு ₹1000 வழங்கப்படுகிறது.

Similar News

News November 7, 2025

வேலை டென்ஷன்.. 10 பேரை ஊசி போட்டு கொன்ற நர்ஸ்!

image

ஜெர்மனியை சேர்ந்த நர்ஸ் ஒருவர் செய்த காரியம் உலகை உலுக்கியுள்ளது. தனியார் ஹாஸ்பிடலில் Night Shift-ல் வேலை செய்து வந்த அவர், வேலை பலுவை குறைக்க, 10 பேரை ஊசி போட்டு கொலை செய்துள்ளார். அதே நேரத்தில், மேலும் 27 பேரை கொல்லவும் அவர் முயற்சித்துள்ளார். டிசம்பர் 2023 முதல் மே 2024 வரை தொடர்ந்து தனது வெறிச்செயல் குறித்து அவரே நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்ட நிலையில், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

News November 7, 2025

FLASH: தங்கம் விலையில் மீண்டும் மாற்றம்

image

சர்வதேச சந்தையில் கடந்த சில நாள்களாக சரிந்து வந்த தங்கம் விலை மீண்டும் உயர்ந்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி 1 அவுன்ஸ்(28g) $19 உயர்ந்து $4,003-க்கு விற்பனையாகிறது. கடந்த சில நாள்களாக $4,000 டாலர்களுக்கு கீழ் விற்பனையாகி வந்த தங்கம் மீண்டும் கிடுகிடுவென அதிகரித்து வருகிறது. நம்மூரில் நேற்று ₹1,120 உயர்ந்த நிலையில், இன்றும் உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

News November 7, 2025

அழகே பொறாமைப்படும் பேரழகுக்கு ஹேப்பி பர்த்டே!

image

நிஜத்தில் ராணிகள் இப்படிதான் இருந்திருப்பார்களோ என என்னும் வகையில் ரசிகர்களை வியக்க வைத்த ‘ஸ்வீட்டி’ அனுஷ்காவுக்கு இன்று ஹேப்பி பர்த்டே. அருந்ததி ஜக்கம்மாவாக, வானம் சரோஜாவாக, பாகுபலி தேவசேனாவாக நடிப்பில் மட்டும் மிரட்டாமல், தனது அழகாலும் திரையில் ஓவியமாக நின்றார். அனுஷ்கா நடித்ததில் உங்களுக்கு பிடித்த படத்தை கமெண்ட் பண்ணுங்க?

error: Content is protected !!