News May 13, 2024

ஹஜ் யாத்திரை செல்லும் மக்களுக்கு தடுப்பூசி

image

தமிழகத்திலிருந்து வருகின்ற 25 ஆம் தேதி முதல் இஸ்லாமியர்கள் ஹஜ் யாத்திரை செல்ல தயாராகி வரும் நிலையில் திருப்பத்தூர் நகராட்சி அரசினர் தோட்டம் பகுதியில் உள்ள சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் அலுவலகத்தில் தடுப்பூசி போடும் பணியை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தலைமை தாங்கி இன்று முகாமை துவக்கி வைத்தார்.  இதில் திருப்பத்தூர் மாவட்டத்தில் 329 பேர் ஹஜ் யாத்திரை பயணம் செல்வதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Similar News

News December 5, 2025

திருப்பத்தூர்: காவல் துறையினர் எச்சரிக்கை!

image

‘டிட்வா புயல்’ எதிரொலியால் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், திருப்பத்தூர் காவல்துறை அதிகாரிகள் பொதுமக்களுக்கு எச்சரித்துள்ளனர். பலத்த மழை பெய்தால் பொதுமக்கள் தெருக்களில் உள்ள மின்கம்பங்கள் மற்றும் மின்சாதனங்களுக்கு அருகே தேங்கிக்கிடக்கும் தண்ணீரில் நடப்பேதா, ஓடுவேதா, விளையாடுவதோ மற்றும் வாகனத்தில் செல்வேதா தவிர்க்க வேண்டும் என காவல் துறையினர் எச்சரித்துள்ளனர்.

News December 5, 2025

திருப்பத்தூர்: பெண்களின் பாதுகாப்பு எண்கள்!

image

வீடு, அலுவலகம், பொது இடம், பேருந்து என அனைத்து இடங்களிலும் பெண்கள் & குழந்தைகளின் பாதுகாப்பு கேள்வி குறியே. எனவே, பெண் மீதான வன்கொடுமை- 181, ராகிங்-155222, பெண்கள் & குழந்தைகள் மிஸ்ஸிங்- 1094, குழந்தைகள் பாதுகாப்பு- 1098, மனஉளைச்சல்- 9911599100, தேசிய பெண்கள் ஆணையம்- 01126944754, 26942369, தமிழ்நாடு பெண்கள் ஆணையம்- 044 28592750 என்ற எண்களை சேவ் பண்ணுவது அவசியமானதாகும். தெரிந்த பெண்களுக்கு பகிரவும்

News December 5, 2025

திருப்பத்தூர்: 8 கிராம் தங்கம், ரூ.50,000 பணத்துடன் திருமணம்!

image

TN அரசு சாதி மறுப்பு திருமணங்களை ஊக்குவிக்க டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி கலப்பு திருமண திட்டத்தை செயல்படுத்துகிறது. இதன்படி, மணமக்கள் 10th முடித்திருந்தால் ரூ.25,000, 8 கி தங்கம், டிகிரி பெற்றிருந்தால் ரூ.50,000, 8 கி தங்கம் வழங்கப்படுகிறது. இதற்கு, BC,MBC/SC,ST & FC/BC,MBC முறையில் திருமணம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு சமூக நல அலுவலரை அணுகலாம். இந்த தகவலை உடனே ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!