News May 15, 2024
ஹஜ் புனித யாத்திரை செல்பவர்களுக்கு தடுப்பூசி

ஊட்டியில் தமிழ்நாடு ஹஜ் கமிட்டி மற்றும் சுன்னத் ஜமாத் பெடரேஷன் மதினா பள்ளி வாசல் நிர்வாகம் இணைந்து ஹஜ் புனித யாத்திரை செல்பவர்களுக்காக தடுப்பூசி முகாமை நடத்தின. சுகாதார பணிகள் துணை இயக்குநர் பாலுசாமி துவக்கி வைத்தார். அதில் ஊட்டி, குன்னுார், கோத்தகிரி, மஞ்சூர், கூடலுார், பந்தலுார் ஆகிய தாலுகாவுக்குட்பட்ட பகுதிகளில் 35 பெண்கள், 29 ஆண்கள் என 64 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
Similar News
News December 16, 2025
கோத்தகிரியில் அதிரடி கைது!

கீழ் கோத்தகிரி கெங்கரை மந்தட்டி கிராமத்தைச் சேர்ந்த சந்திரசேகர்(48). இவருக்கு 17 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி ஷீலா(45) என்ற மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஷீலா தனது 2வது மகனுடன் வாழ்ந்து வந்த நிலையில், சத்திரசேகர் தனது மனைவியை அடித்து கொலை மிரட்டல் விடுத்ததாக கிடைத்த புகாரின் பேரில் அவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
News December 16, 2025
குன்னூர் பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகள் ஆட்சியர் ஆய்வு

நீலகிரி மாவட்டம், குன்னூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட பணிகள் மற்றும் குன்னூர் நகராட்சி பகுதியில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன. மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு நேற்று நேரில் சென்று பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அவருடன் நகராட்சி அலுவலர்கள் உடன் இருந்தனர்.