News August 20, 2024
ஸ்ரீ நாராயண குருவாக நடித்து விருது வாங்கிய தமிழ் நடிகர்

நடிகர் தலைவாசல் விஜய் 2010ஆம் ஆண்டு ஸ்ரீ நாராயண குருவின் வாழ்க்கையை பதிவு செய்த “யுக புருஷன்” என்ற மலையாள சினிமாவில் நாராயண குருவாக நடித்தார். அப்போதைய கேரள முதல்வர் அச்சுதானந்தன் அந்த படத்தை பார்த்து விஜய்யை புகழ்ந்தார். அந்த ஆண்டுக்கான கேரள சினிமாவின் சிறந்த நடிகர் விருதும் தலைவாசல் விஜய்க்கு கிடைத்தது. இந்த படம் வெளியான போது கேரளாவில் இவரை கொண்டாடினர்.
Similar News
News January 18, 2026
குமரி மக்களே… இன்றே கடைசி.. உடனே CHECK பண்ணுங்க

குமரி மாவட்டத்தில் SIR பணி மேற்கொள்ளப்பட்டு டிசம்பர் மாதம் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இப்பட்டியலில் இடம்பெறதாவர்கள் மற்றும் விடுபட்ட, புதிய வாக்காளர் சேர்க்கை, பெயர் திருத்தம், புகைப்பட திருத்தம் போன்றவை மேற்கொள்ள இன்றே கடைசி நாள். இதற்கு முன் வெளியிட்ட பட்டியலில் உங்க பெயர் இருக்கானு <
News January 18, 2026
குமரியில் அரசு ஊழியர் பரிதாப பலி..!

குருந்தன்கோட்டை சேர்ந்தவர் கார்த்திகேயன் (38). இவர் ஆதி திராவிடர் நலத்துறை இளநிலை உதவியாளராக பணியாற்றி வருகிறார். தக்கலை தாலுகா அலுவலக குடியிருப்பில் தங்கி இருந்த இருவருக்கு வலிப்பு நோய் இருந்துள்ளது. இதனால் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக தக்கலை போலீசார் நேற்று வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
News January 18, 2026
குமரி: டூவீலர் விபத்தில் இளைஞர் பலி..!

தடிகாரன்கோணம் குட்டி பொத்தையை சேர்ந்தவர் ராபின்சன் (26). இவர் மண் எடுக்கும் இயந்திர ஓட்டுநர் ஆவார். இவர் வேலை முடிந்து டூவீலரில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்த போது பில்லத்தூர் என்ற இடத்தில் வரும் போது நிலை தடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து குலசேகரம் போலீசார் நேற்று முன் தினம் வழக்குப்பதிந்து விசாரணை.


