News November 26, 2025
ஸ்ரீவி., சிறுமிக்கு பாலியல் தொல்லை.. 3 ஆண்டு சிறை

ஸ்ரீவில்லிபுத்துார் பகுதி வெம்பக்கோட்டையை சேர்ந்தவர் ஆட்டோ டிரைவரான முத்துப்பாண்டி (39). இவர் 15 வயது சிறுமிக்கு பாலியல் ரீதியாக அச்சத்தை ஏற்படுத்தி தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. இதைத் தொடர்ந்து அவர் போக்சோ வழக்கின் கீழ் கைது செய்யப்பட்டார். ஸ்ரீவில்லிபுத்துார் போக்சோ நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்தது. இதில் அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி புஷ்பராணி தீர்ப்பளித்தார்.
Similar News
News January 22, 2026
விருதுநகர் மாவட்ட கலெக்டர் முக்கிய அறிவிப்பு

விருதுநகர் மாவட்டத்தில் வரும் குடியரசு தினத்தை முன்னிட்டு அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. குறிப்பாக மாவட்டத்திற்கு உட்பட்ட 450 கிராம ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. எனவே, குடியரசு தினத்தில் நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் தவறாது கலந்து கொண்டு பயனடைய வேண்டுமென விருதுநகர் மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார்.
News January 22, 2026
விருதுநகர்: இந்த எண்கள் முக்கியம்., SAVE பண்ணிக்கோங்க!

உங்க ரேஷன் கடைகளில் பொருட்கள் கிடைப்பதில் குறைபாடு, ஊழியர்கள் செயல்பாடு, கடை திறப்பு தாமதம் போன்ற புகாருக்கு உடனே கால் பண்ணுங்க.
1.விருதுநகர் – 9445000354
2.அருப்புக்கோட்டை – 9445000355
3.திருச்சுழி- 9445000356
4.ராஜபாளையம்- 9445000357
5.ஸ்ரீவில்லிபுத்தூர்- 9445000358
6.சிவகாசி- 9445000359
7.சாத்தூர்- 9445000360
8.காரியாபட்டி- 9445000361
இப்பயனுள்ள தகவலை எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க
News January 22, 2026
விருதுநகர்: இனி கம்மி விலையில் புது பைக், கார், டிராக்டர்

விருதுநகர் மக்களே, மத்திய அரசு E – வாகனங்களை ஊக்கப்படுத்தும் விதமாக மானியம் அறிவித்துள்ளது. பைக், கார், டிராக்டர் போன்ற அனைத்து 10,000 – 50,000 வரை E- Voucher மூலம் மானியம் வழங்குகிறது.<


