News June 17, 2024
ஸ்ரீரங்கத்தில் நான்கு பேர் கைது!

திருச்சி உதவி வனப்பாதுகாவலர் சரவணக்குமாா் தலைமையிலான வனத்துறையினா் ஸ்ரீரங்கம் பகுதியைச் சோ்ந்த ஸ்ரீதா் வீட்டை சோதனையிட்டதில் அங்கு 2.9 கிலோ யானைத் தந்தம், புள்ளி மானின் தோல் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து ஸ்ரீதரையும், இவருக்கு உடந்தையாக வெங்கடசுப்பிரமணியன் பாண்டுரங்கன் முரளி ஆகியோரையும் கைது செய்து யானைத் தந்தம், மான் தோல் ஆகியவற்றைப் பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.
Similar News
News January 15, 2026
நவல்பட்டு: துணை முதல்வரை வரவேற்ற ஆட்சியர்

திருச்சி மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு மைதானம் திறப்பு விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக, தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னையிலிருந்து விமானம் மூலம் இன்று திருச்சி வந்தடைந்தார். அவருக்கு விமான நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் சரவணன் பூங்கொத்து வழங்கி வரவேற்பளித்தார். இந்நிகழ்வில் அரசு துறை அலுவலர்கள், திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
News January 15, 2026
திருச்சி: அரசு ஊழியர் லஞ்சம் கேட்டால் என்ன செய்வது?

சான்றிதழ்கள் வழங்குவது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா, சிட்டா, அடங்கல் சான்றிதழ் வழங்குவது உள்ளிட்டவை வட்டாட்சியரின் (தாசில்தார்) முக்கிய பணிகளாகும். இவற்றை முறையாக செய்யமால் தாசில்தாரோ அல்லது அலுவலக ஊழியர் யாரவது உங்களிடம் லஞ்சம் கேட்டால், திருச்சி மாவட்ட மக்கள் 0431-2420166 என்ற எண்ணை தொடர்பு கொண்டு தயங்காமல் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க!
News January 15, 2026
திருச்சி மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

பொதுமக்களின் நலன் கருதி திருச்சி காவல்துறை முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், ‘தெரியாத வங்கி கணக்கிலிருந்து தவறுதலாக உங்களுக்கு பணப் பரிமாற்றம் நடந்துள்ளதாக அழைப்புகள் வந்தால் எச்சரிக்கையுடன் இருக்கவும்.! இது உங்கள் வங்கி கணக்குகளை முடக்குவதற்கு அல்லது ஹேக் செய்வதற்கு பொறியாக இருக்கலாம்’ என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


