News May 1, 2024
ஸ்தானிகர் முன்ஜாமீன் மனு தள்ளுபடி

திருப்புல்லாணி ஆதி ஜெகநாதர் பெருமாள் கோவிலில் ரூ.1 கோடி மதிப்பிலான நகைகள் மாயமானது. இது தொடர்பாக கோவில் ஸ்தானிகர் சீனிவாச ஐயங்கார் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனால் சீனிவாச ஐயங்கார் மாவட்ட கோர்ட்டில் 2வது முறையாக முன் ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு விசாரணை நேற்று வந்த போது நீதிபதி குமரகுரு முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
Similar News
News December 6, 2025
ராமநாதபுரம்: கரண்ட் கட்.? இனி Whatsapp மூலம் தீர்வு

ராமநாதபுரம் மாவட்டத்தில் உங்க பகுதியில் ஆபத்தான வகையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள், மின்கம்பிகள், எரியாத தெரு விளக்குகள் உள்ளதா? இது குறித்து மின்வாரியத்திடம் WhatsApp மூலமாக எளிதில் புகாரளிக்கலாம். 89033 31912 என்ற எண்ணின் வாயிலாக மேற்கண்ட புகார்களை எவ்வித அலைச்சலும் இல்லமால் போட்டோவுடன் புகாரளிக்கலாம். அவசர உதவிக்கு – 94987 94987 என்ற எண்ணையும் அழைக்கலாம். இத்தகவலை எல்லோருக்கும் SHARE பண்ணுங்க
News December 6, 2025
ராமநாதபுரத்தில் இங்கெல்லாம் இலவச மருத்துவ முகாம்

இராமநாதபுரம் மாவட்டம், நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம் தேவிபட்டினம் விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளி மற்றும் முதுகுளத்தூர் திருவரங்கம் திரு இருதய மேல்நிலைப்பள்ளி வளாகங்களில் இன்று (டிச.6) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது. இதில் பொது மக்கள் பங்கேற்று பயன்பெறலாம் என கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார். அனைவருக்கும் SHAREபண்ணுங்க
News December 6, 2025
ராம்நாடு: B.E முடித்தால் ரூ.1,40,000 சம்பளத்தில் அரசு வேலை!

ராமநாதபுரம் மக்களே, ஏவுகனை மற்றும் பாதுகாப்பு உபகரனங்கள் தயாரிக்கும் பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் 80 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளன. 18 – 27 வயதுகுட்பட்ட B.E./ B. Tech, PG படித்தவர்கள் டிச 29க்குள்<


