News December 14, 2025
வையப்பமலை அருகே சோகம்: தொழிலாளி விபரீத முடிவு!

வையப்பமலை அருகே இராமாபுரம் அடுத்த மாந்தோப்புகாலனி பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி செங்கோட்டுவேல் (37) குடும்ப தகராறில் மனவிரக்தி அடைந்து நேற்று விஷம் குடித்துள்ளார். உடனே 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார், இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று (டிச.13) இறந்து விட்டார். இது குறித்து எலச்சிபாளையம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News January 25, 2026
நாமக்கல்: 10th போதும் அரசு வேலை APPLY NOW

நாமக்கல் மக்களே ரிசர்வ் வங்கியில் 572 அலுவலக உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இதற்கு 10-ம் வகுப்பு மற்றும் மாநில மொழி எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும். சம்பளம் ரூ.24,250-53,330 வரை வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் பிப்ரவரி 4-ம் தேதி வரை இங்கே <
News January 25, 2026
நாமகிரிப்பேட்டை அருகே வசமாக சிக்கிய இருவர்: அதிரடி கைது

நாமகிரிப்பேட்டை போலீசார் தொப்பப்பட்டி பகுதியில் நடத்திய ரோந்து பணியில், சட்டவிரோதமாக மது விற்ற ஜேடர்பாளையம் அழகேசன் மற்றும் பாபு ஆகிய இருவரைக் கைது செய்தனர். அவர்களிடமிருந்து மொத்தம் 38 மதுபாட்டில்கள் மற்றும் 1,200 ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இச்சம்பவம் குறித்து சப்-இன்ஸ்பெக்டர் செல்வம் தலைமையிலான போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News January 25, 2026
மோகனூர் அருகே பெண்ணுக்கு அரிவாள் வெட்டு சம்பவம்

நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே தகராறில் தனலட்சுமி என்ற பெண்ணை அரிவாளால் வெட்டி கொலை மிரட்டல் விடுத்த சுரேஷ் என்பவர் கைது செய்யப்பட்டார். எஸ்பி விமலாவின் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி உத்தரவின்படி சுரேஷ் தற்போது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார். படுகாயமடைந்த தனலட்சுமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.


