News June 17, 2024
வேளாண் கண்காட்சி நிறைவு

பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற 3 நாட்கள் நடைபெற்ற வேளாண் கண்காட்சி (ஜூன் 16) நேற்றுடன் நிறைவடைந்தது. கண்காட்சியில் விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் நவீன இயந்திரங்கள், ட்ரோன்கள், சிறுதானியம் உள்ளிட்ட பாரம்பரிய விதையுடன் விவசாயிகளுக்கு அரசு வழங்கப்படும் திட்டங்கள் கூடிய 150 அரங்குகளுடன் அமைக்கப்பட்டிருந்தது. வேளாண் கண்காட்சியில் 30,000 பேர் பார்வையிட்டு சென்றுள்ளனர்.
Similar News
News January 14, 2026
பெரம்பலூரில் இப்படி ஒரு இடமா?

ரஞ்சன்குடி கோட்டை, பெரம்பலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள வரலாற்று சிறப்பு மிக்க ஒரு அழகிய சிறிய கோட்டையாகும். இக்கோட்டை கி.பி14ம் நூற்றாண்டில் விஜயநகர பேரரசின் நாயக்க மன்னர்களால் கட்டப்பட்டது. தற்பொழுது இந்திய தொல்பொருள் அளவை கழகத்தின் பராமரிப்பில் உள்ளது. அரண்களால் சூழப்பட்டுள்ள இக்கோட்டையில் அரசர்களுக்கு உரிய மாளிகை, குடியிருப்பு கட்டிடங்கள், சுரங்க அறைகள், மசூதி மற்றும் கொடிக் கம்பம் ஆகியவை உள்ளன.
News January 14, 2026
பெரம்பலூர்: வாட்ஸ்ஆப் மூலமாக பான் கார்டு

பெரம்பலூர் மக்களே, வாட்ஸ்ஆப் மூலமாக பான் கார்டு பெற்று கொள்ளும் சிறப்பு அம்சத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கு முதலில் உங்களது WhatsApp-ல் இருந்து ‘90131 51515’ என்ற எண்ணுக்கு ‘HI’ என மெசேஜ் அனுப்ப வேண்டும். பிறகு ஆதார் எண்ணை பதிவு பதிவிட்டு, PAN Card என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்தால் போதும், உங்க பான்கார்டு Whatsapp-ல் அனுப்பி வைக்கப்படும். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
News January 14, 2026
பெரம்பலூர்: இதை பற்றி நீங்கள் அறிந்ததுண்டா?

பெரம்பலூர் மாவட்டம் சாத்தனூர் கிராமத்தில் புகழ்பெற்ற தேசிய கல்மரப் பூங்கா உள்ளது. இங்கு சுமார் 120 மில்லியன் ஆண்டு பழங்கால மரம் ஒன்று கல்லாக மாறியிருக்கலாம் என சொல்லப்படுகிறது. 1940ம் ஆண்டு தஞ்சாவூரில் இருந்து வந்த, இந்தியப் புவியியல் ஆய்வு மையத்தின், புகழ்பெற்ற புவியியலாளரான டாக்டர் எம்.எஸ். கிருஷ்ணனால் இது கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அனைவரும் தெரிந்து கொள்ள இதை ஷேர் பண்ணுங்க!


