News October 20, 2025
வேலூர்: GAS வாங்குறீங்களா…? இதை தெரிஞ்க்கோங்க!

வேலூர் மக்களே உங்க வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை விட அதிக பணம் கேட்குறங்களா? இனி கவலை வேண்டாம். கேஸ் ரசீதில் உள்ள விலையைவிட அதிகமாக பணம் கேட்டால் 18002333555 எண்ணுக்கு அல்லது https://pgportal.gov.in/ இந்த இணையதளத்தில் புகாரளியுங்க. இண்டியன், பாரத்கேஸ் மற்றும் ஹெச்பி க்கும் இந்த எண்ணில் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கு தெரியபடுத்த SHARE பண்ணுங்க.
Similar News
News December 10, 2025
வேலூர்: மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் கவனத்திற்கு!

வேலூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்களுக்கு தேவையான உதவி சாதனங்கள் நாளை(டிச.11) முதல் டிச.13ஆம் தேதி வரை நடைபெறும் முகாம்களில் பங்கேற்க மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி அறிவுறுத்தினார். மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் அலிம்கோ நிறுவனம் இணைந்து உதவி சாதனங்கள் வழங்க பயனாளிகளைத் தேர்வு செய்கின்றன.
News December 10, 2025
வேலூர் வருகிறார் ஜனாதிபதி!

இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு வேலூர் மாவட்டத்திற்கு வரும் டிச.17ஆம் தேதி வருகை தர உள்ளார். அவர் நாராயணி தங்க கோவிலில் சாமி தரிசனம் செய்ய உள்ளார். இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் சுப்புலெட்சுமி தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகனன், நாராயணி கோயில் நிர்வாகி சம்பத், அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
News December 10, 2025
வேலூர்: கேஸ் மானியம் ரூ.300 பெறுவது எப்படி?

கேஸ் மானியம் ₹300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர, எல்பிஜி இணைப்பை ஆதார் அட்டையுடன் இணைக்க வேண்டும். உங்கள் கேஸ் வழங்குநரின் (Indane, HP, Bharat) இணையதளத்திற்குச் சென்று, ‘Link Aadhaar’ விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். நுகர்வோர் எண், மொபைல் எண், ஆதார் ஆகிய விவரங்களை உள்ளிட்டு, OTP மூலம் இணைப்பை உறுதி செய்யலாம். இதன் மூலம் வீட்டில் இருந்தபடியே மானியத்தைப் பெறலாம். இதை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க!


