News April 6, 2024
வேலூர்: 100 அடி ஆழம் கொண்ட கிணற்றில் விழுந்த நபர்

அணைக்கட்டு அடுத்த ராஜபுரத்தை சேர்ந்த மணி (26) என்பவர் நேற்று தனது கிராமத்தில் உள்ள சுமார் 100 அடி ஆழம் கொண்ட பொது கிணற்றை சுத்தம் செய்ய இறங்கியபோது கையில் காயம் ஏற்பட்டது. பின்பு அவரால் மேலே வர முடியவில்லை. அவருடைய அலறல் சத்தம் கேட்டு பொதுமக்கள் தீயணைப்பு துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். உடனடியாக வந்த தீயணைப்பு வீரர்கள் அவரை பத்திரமாக மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர் .
Similar News
News February 19, 2026
வேலூரில் கழுத்து இறுக்கி சிறுமி பலி!

விரிஞ்சிபுரம் அருகே குடிசை கிராமத்தை சேர்ந்தவர் பழனி. இவரது மனைவி சத்யபிரியா. இவர்களது மகள் ஜீவிதா (9). சிறுமி ஜீவிதா வீட்டின் ஜன்னலில் சேலையில் ஊஞ்சல் கட்டி விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது சேலை எதிர்பாராத விதமாக அவரது கழுத்தில் இறுக்கியது. இதில் சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்த விரிஞ்சிபுரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News February 19, 2026
வேலூர்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

வேலூர் மாவட்டத்தில் நேற்று (பிப்.18) இரவு முதல் இன்று (பிப்.19) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ அல்லது 100 என்ற எண்ணுக்கோ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!