News November 13, 2025
வேலூர்: யோகா பயிற்சியாளர் தேர்வு -கலெக்டர் தகவல்

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் வேலூர் மாவட்டத்தில் யோகா பயிற்சியாளர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். எனவே தகுதி வாய்ந்த யோகா பயிற்சியாளர்கள் தங்களுடைய பயோ டேட்டா மற்றும் சான்றிதழ்கள் அசல் மற்றும் நகலுடன் வரும் நவம்பர் 19-ம் தேதி மாலை 4 மணியளவில் காட்பாடி மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நேரில் வந்து கலந்து கொள்ளலாம் என கலெக்டர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.
Similar News
News December 14, 2025
BIG NEWS: வேலூரை குறிவைக்கும் பாஜக?

2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக 50 தொகுதிகளில் போட்டியிடுவதற்கு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், வேலூரில் அணைக்கட்டு, கே.வி.குப்பம், வேலூர், குடியாத்தம், ஆகிய தொகுதிகளில் பாஜக-விற்கு வெற்றிவாய்ப்பு உள்ளது என அடையாளம் கண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. உங்க கருத்து என்ன? கமெண்ட் பண்ணுங்க.
News December 14, 2025
வேலுார் வீரருக்கு ரூ.1.60 கோடி இழப்பீடு!

தேசிய சட்ட பணிகள் ஆணை குழு & வேலுார் மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு சார்பில், நேற்று லோக் அதாலத் நீதிமன்றம் நடைபெற்றது. இதில் வேலுார், மூஞ்சுர்ப்பட்டை சேர்ந்த எல்லை பாதுகாப்பு படை வீரர் கருணாகரன் (55) என்பவர், சாலை விபத்தில் மாற்றுத்திறனாளி ஆனார். அவரது குடும்பத்தினருக்கு, 1 கோடியே 60 லட்சம் ரூபாயை யுனைடெட் இந்தியா இன்ஷூரன்ஸ் நிறுவனம் இழப்பீடாக வழங்க நேற்று லோக் அதாலத் கோர்ட் உத்தரவிட்டது.
News December 14, 2025
வேலூர்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

வேலூர் மாவட்டத்தில் நேற்று (டிச.13) இரவு முதல் இன்று (டிச.14) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!


