News March 28, 2024

வேலூர் முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு

image

மக்களவை தேர்தலையொட்டி வேலூர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த், அதிமுக வேட்பாளர் பசுபதி, பாஜக வேட்பாளர் ஏ.சி.சண்முகம், சுயேச்சையாக போட்டியிடும் இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் தலைவர் நடிகர் மன்சூர் அலிகான் ஆகியோரது வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன என மாவட்ட தேர்தல் அலுவலரும். கலெக்டருமான சுப்புலட்சுமி தெரிவித்தார்.

Similar News

News January 20, 2026

வேலூரில் 32,18,430 ரூபாய் வரி!

image

வேலூர் போக்குவரத்து சரகத்துக்கு உட்பட்ட வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் வட்டார போக்குவரத்து அலுவலர் தலைமையில் 7 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு மொத்தம் 804 ஆம்னி பஸ்களில் சோதனை நடத்தப்பட்டது. அதில் விதிமீறிய 109 பஸ்களுக்கு ரூ. 2 லட்சத்து 21 ஆயிரம் அபராதமும், பிற மாநில நுழைவுவரி செலுத்தாத பஸ்களிடம் இருந்து ரூ.32 லட்சத்து 18 ஆயிரத்து 430 வரி வசூல் செய்யப்பட்டது.

News January 20, 2026

வேலூர் சிறைக்கு திரும்பிய 29 கைதிகள்!

image

வேலூர் மாவட்டம், தொரப்பாடியில் உள்ள மத்திய ஆண்கள் சிறையில் இருந்து பொங்கல் பண்டிகையை குடும்பத்துடன் கொண்டாட 29 பேருக்கு பரோல் வழங்கப்பட்டது.‌ அதன்பேரில் கைதிகள் பரோலில் சொந்த ஊருக்கு சென்றனர். இந்நிலையில் பரோல் முடிந்து அனைத்து கைதிகளும் நேற்று (ஜன.19) மீண்டும் சிறைக்கு திரும்பினர் என சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

News January 20, 2026

வேலூரில் ‘இணைந்த கைகள்’ கையுந்து பந்து போட்டிகள்!

image

வேலூர் நேதாஜி மைதானத்தில் மாவட்ட காவல் துறை மற்றும் மாவட்ட கையுந்து பந்து சங்கம் சார்பில் ‘இணைந்த கைகள்’ கையுந்து பந்து போட்டி நேற்று (ஜன.19) தொடங்கியது. ​வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன், விஐடி பல்கலைக்கழக து.தலைவரும், மாவட்ட கையுந்து பந்து சங்கத் தலைவருமான ஜி.வி. செல்வம் ஆகியோர் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது. இதில் வேலூர் சரக டிஐஜி தருமன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார.

error: Content is protected !!