News June 19, 2024

வேலூர் மாவட்டத்தில் 339.40 மி.மீ மழை பதிவு

image

வேலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அந்த வகையில் நேற்று (ஜூன் 17 )  கே.வி.குப்பத்தில் அதிகபட்சமாக 63.00 மி.மீ மழை பதிவானது. குடியாத்தம் 19.00 மி.மீ மழையும், காட்பாடி 59.00 மி.மீ, பொன்னை 36.00 மி.மீ, வேலூர் 33.20 மி.மீ மழையும் பதிவானது. மாவட்டம் முழுவதுமாக 339.40 மி.மீ மழைப்பொழிவு பதிவானதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Similar News

News January 14, 2026

வேலூரில் யானை தந்தங்கள் விற்பனை!

image

பேரணாம்பட்டு சேராங்கல் கிராம வனப்பகுதியில் யானையின் தந்தங்களை மறைத்து வைத்து ஒரு கும்பல் விற்கமுயன்று வருவது தெரிய வந்ததது. இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர் அப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது யானை தந்தங்களை விற்க முயன்ற மணி (22), சின்னதம்பி (24), ஆறுச்சாமி (21) ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும் யானை தந்தங்களை பறிமுதல் செய்தனர். மேலும் யானை தந்தம் எப்படி என விசாரித்து வருகின்றனர்.

News January 14, 2026

வேலூரில்: உண்டியல் திருடனை சுற்றி வளைத்த மக்கள்!

image

குடியாத்தம் பலமநேர் ரோட்டில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் 2 வாலிபர்கள் நேற்று நூலில் காந்தத்தை கட்டி உண்டியலுக்குள் விட்டு பணத்தை திருட முயன்றனர். பொதுமக்கள் அவர்களை சுற்றி வளைத்து பிடித்த போது ஒருவர் தப்பி ஓடிவிட்டார். பிடிபட்ட மற்றொரு நபரை குடியாத்தம் டவுன் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணையில் அவர் கமல் (26) என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

News January 14, 2026

வேலூர்: 100 அடி கிணற்றில் விழுந்த முதியவர் பரிதாப பலி!

image

வேலூர்: மசிகத்தை சேர்ந்தவர் ஜெகதீசன் (62). இவர் நேற்று திடீரென காணாமல் போனார். அவரை குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. பின்னர், அதே கிராமத்தில் ஒரு விவசாய நிலத்தில் 100 அடி ஆழமுள்ள தரைமட்ட கிணற்றில் ஜெகதீசன் தவறி விழுந்து இறந்து கிடந்தது தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் வந்து முதியவரின் உடலை மீட்டனர். இதுகுறித்த வழக்கை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!