News June 17, 2024
வேலூர் மாவட்டத்தில் இவ்வளவு மழையா?

வேலூர் மாவட்டத்தில் நேற்று (ஜூன் 16) பகலில் வெயில் 102.9 டிகிரி கொளுத்திய நிலையில் இரவு திடீரென பலத்த மழை பெய்தது. கே.வி.குப்பத்தில் அதிகபட்சமாக 74.40 மிமீ மழை பதிவானது. ஒடுகத்தூர் 3.00 மிமீ மழையும், குடியாத்தம் மோர்தனா 13.20 மிமீ, வேலூர் 24.10 மிமீ, காட்பாடி 38.80 மிமீ மழையும் பதிவானது. மாவட்டம் முழுவதுமாக 276 மிமீ மழைப்பொழிவு பதிவானதாக மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
Similar News
News January 21, 2026
வேலூர்: பெண்ணிடம் பணம் பறித்தவர் கைது!

வேலூர் அடுத்த சலவன்பேட்டையை சேர்ந்தவர் சாந்தி (55). இவர் கடந்த 17-ம் தேதி அப்பகுதியில் நடந்து சென்ற போது இவரது கைப்பையை மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் திடீரென பறித்துக்கொண்டு தப்பினார். இதில் கைப்பையில் இருந்த ரூ. 4,000 மற்றும் செல்போனை பறிபோனது. இது தொடர்பாக வேலூர் தெற்கு போலீசார் நேற்று கே.கே.நகரை சேர்ந்த சித்திக் (37) என்பவரை கைது செய்து பணம், செல்போனை பறிமுதல் செய்தனர்.
News January 21, 2026
வேலூர்: ஒரே இடத்தில் 3 டாஸ்மாக்குகள்; மக்கள் அவதி!

வேலூர்–ஆற்காடு சாலையில் ஒரே இடத்தில் 3 டாஸ்மாக் மதுக்கடைகள் இயங்கி வருகிறது. இதற்கு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பள்ளிகள், குடியிருப்புகள் அருகே மதுக்கடைகள் அமைக்கப்பட்டுள்ளதால் பெண்கள், மாணவர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுவதாக குற்றசாட்டு எழுந்துள்ளது. எனவே இதுகுறித்து அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.
News January 21, 2026
வேலூரில் 700 பேர் அதிரடி கைது!

வேலூரில் தோ்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி சத்துணவு ஊழியர்கள் நேற்று (ஜன.20) போராட்டத்தில் ஈடுபட்டனர். 2021 சட்டப்பேரவை தேர்தலில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட 700 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். இந்த நடவடிக்கையால் வேலூர் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


