News May 15, 2024
வேலூர் மாவட்டத்தில் இன்றைய வெயில் அளவு

வேலூர் மாவட்டத்தில் இன்று (மே 15) 101.7°F வெயில் பதிவானது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக மாலை நேரங்களில் வேலூர் சுற்று வட்டார பகுதிகளில் குளிர்ந்த காற்று வீசுவதால் பொதுமக்கள் சற்று நிம்மதி அடைந்து வருகின்றனர். முதியவர்கள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் பகல் 11 மணி முதல் 3 மணி வரை வெளியில் வருவதை தவிர்க்குமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Similar News
News November 14, 2025
வேலூர்: அழுகிய நிலையில் சடலம் மீட்பு!

வேலூர்: கீழ்மெட்டுக்குளம் பகுதியை சேர்ந்தவர் ஜோதிராமன் (61) டெய்லர். இவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு வீட்டில் இருந்துள்ளார். இந்நிலையில் இவரது வீட்டில் இருந்து நேற்று துர்நாற்றம் வீசியது. தகவலறிந்த காட்பாடி போலீசார் சென்று பார்த்தனர். அப்போது ஜோதிராமன் உடல் அழுகிய நிலையில் சடலமாக கிடந்தார். இதையடுத்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.
News November 14, 2025
வேலூர்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

வேலூர் மாவட்டத்தில் நேற்று (நவ.13) இரவு முதல் இன்று (நவ.14) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!
News November 13, 2025
வேலூரில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம்

வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் தலைமையில் இன்று (நவ.13) மாவட்ட காவல் அலுவலகத்தில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் காவல் துணை கண்காணிப்பாளர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். கலந்தாய்வுக் கூட்டத்தில் பல்வேறு அதிகாரிகளுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.


