News August 7, 2025

வேலூர் மாவட்டத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை

image

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதேபோல் தென்இந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று வட தமிழகத்தில் அநேக இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வேலூரில் கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எச்சரிக்கையாக இருங்கள். அனைவருக்கும் ஷேர் செய்யுங்கள்

Similar News

News December 9, 2025

வேலூர்: ரேஷன் கார்டில் பிரச்னை? கலெக்டர் அறிவிப்பு!

image

வேலூர் மாவட்டத்தில் வரும் டிச.13ஆம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை பொது விநியோகத்திட்ட சிறப்பு குறைதீர்வு முகாம் நடைபெறவுள்ளது. இதில், குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்குதல் முகவரி மாற்றம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும் எனவும், தரம் குறித்த புகார்கள் இருப்பின் அதனையும் தெரிவிக்கலாம் என கலெக்டர் சுப்புலெட்சுமி தெரிவித்துள்ளார்.

News December 9, 2025

வேலூர்: கட்டட தொழிலாளி கொலை!

image

வேலூர்: சதுப்பேரி பகுதியைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளி பிரேம்குமார் (34). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த தந்தை கோட்டீஸ்வரன் (54), மகன் சக்தி (24) ஆகியோருக்கும் இடையே நேற்று(டிச.8) கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று (டிச.9) ஆர்.என்.பாளையம் பஜார் வீதியில் பிரேம்குமாரை தந்தை, மகன் சேர்ந்து கத்தியால் குத்தி கொலை செய்துள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

News December 9, 2025

வேலூர் மக்களே.., 5 ஏக்கர் நிலம் வாங்க வாய்ப்பு!

image

பெண்கள் சொந்த நிலம் வாங்க தமிழக அரசு அறிமுகப்படுத்திய ‘நன்னிலம்’ திட்டத்தின் கீழ் 2.5- 5 ஏக்கர் வரையிலான நிலம் வாங்க 50% மானியத்துடன் கடனுதவி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள்ளிருக்கும் 18 – 56 வயது வரை உள்ள பெண்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க விரும்புவோர் TAHDCO அலுவலகத்தில் நேரடியாக சென்றோ (அ) <>இங்கு<<>> கிளிக் செய்து விண்ணப்பிக்கவும். ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!