News October 12, 2025
வேலூர்: மணல் கடத்திய லாரி பறிமுதல்

காட்பாடி போலீசார் பள்ளிக்குப்பம் ரயில்வே கேட் அருகே நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த டிப்பர் லாரியை நிறுத்த முயன்றனர். போலீசாரை கண்டதும் லாரியை நிறுத்தி விட்டு டிரைவர் தப்பி ஓடினார். இதையடுத்து லாரியை சோதனை செய்தபோது அதில் 2 யூனிட் ஆற்று மணல் கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து லாரியை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிந்து தப்பி ஓடிய டிரைவரை தேடி வருகின்றனர்.
Similar News
News December 9, 2025
வேலூர் கலெக்டர் தலைமையில் ஆலோசனை!

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026 தொடர்பாக அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி தலைமையில் இன்று (டிச.9) ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சிவசுப்பிரமணியன், மாநகராட்சி ஆணையாளர் லட்சுமணன், வேலூர் ஆர்டிஓ செந்தில்குமார், குடியாத்தம் ஆர்டிஓ சுபலட்சுமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
News December 9, 2025
வேலூர்: உதவி தொகை பெற விண்ணப்பம்.. கலெக்டர் தகவல்!

அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள், தனியார் தொழிற் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகபிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் மாணவ/மாணவியருக்கு பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகை (PM YASASVI Postmatric Scholarship) திட்டத்தின் கீழ் பயன்பெற https://umis.tn.gov.in என்ற இணையதளம் மூலம் வரும் 31-ம் தேதிக்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு கலெக்டர் சுப்புலட்சுமி தெரிவித்தார்.
News December 9, 2025
வேலூர்: ரேஷன் கார்டில் பிரச்னை? கலெக்டர் அறிவிப்பு!

வேலூர் மாவட்டத்தில் வரும் டிச.13ஆம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை பொது விநியோகத்திட்ட சிறப்பு குறைதீர்வு முகாம் நடைபெறவுள்ளது. இதில், குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்குதல் முகவரி மாற்றம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும் எனவும், தரம் குறித்த புகார்கள் இருப்பின் அதனையும் தெரிவிக்கலாம் என கலெக்டர் சுப்புலெட்சுமி தெரிவித்துள்ளார்.


