News November 19, 2025

வேலூர்: மகனை நினைத்து கவலை; உயிரை மாய்துகொண்ட தந்தை!

image

வேலூர் மாவட்டம், மூத்தக்கல் பகுதியை சேர்ந்தவர் குணசேகரன் (65), இவர் தன்னுடைய மன வளர்ச்சி குன்றிய மகனுக்கு திருமணமாகவில்லை என்ற மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில் சில நாட்கள் முன்பு விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சித்தார். அதை கண்ட அக்கப் பக்கத்தினர் அவர் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் (நவ18) உயிரிழந்தார் தகவல் அறிந்த தாலுகா போலீசார் வழக்கு போலீஸ் செய்தனர்.

Similar News

News January 15, 2026

வேலூரில் பரபரப்பு: பிரபல ரவுடி போலீசில் சரண்!

image

செங்கல்பட்டு காவல் நிலையத்தில் 2 கொலை, 25-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ள பிரபல ரவுடி அமலராஜ், 2026 ஜனவரி 13 இரவு வேலூர் காட்பாடி காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார். மது போதையில் இருந்த அவர், தன்னை ஒரு கும்பல் கொலை செய்ய வருவதாகக் கூறி சரணடைந்தார். பின்னர், தகவலறிந்த செங்கல்பட்டு போலீசார் விரைந்து வந்து, அமலராஜை கைது செய்து அழைத்துச் சென்றனர்.

News January 15, 2026

வேலூர்: பேரணாம்பட்டில் மூன்று பேர் அதிரடி கைது

image

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு வன சரகம் சாரங்கல் வன பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த பேரணாம்பட்டு வனத்துறையினர் யானை தந்தங்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ய முயன்ற மணி, சின்னத்தம்பி, ஆறுச்சாமி ஆகிய 3 பேரையும் நேற்று ஜன.14 கைது செய்தனர். தொடர்ந்து, பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2 யானை தந்தங்களை பறிமுதல் செய்த வனத்துறையினர், இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News January 15, 2026

வேலூர்: காவல்துறை இரவு ரோந்து பணி விவரம் வெளியீடு

image

வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்கள் குடியாத்தம், காட்பாடி, கே வி குப்பம், மேல்பட்டி, பேரணாம்பட்டு, அணைக்கட்டு, பள்ளிகொண்டா இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்புக்காக வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணி செய்து வருகின்றன. அதன்படி இன்று (ஜன-14) இரவு ரோந்து பணி விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் வேலைக்குச் செல்லும் பெண்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!