News August 5, 2024
வேலூர் திறனாய்வு தேர்வில் 369 பேர் ஆப்சென்ட்

11ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வு தேர்வு வேலூர் மாவட்டத்தில் நேற்று(ஆகஸ்ட் 4) நடந்தது. இந்த தேர்வை எழுத வேலூர் மாவட்டத்தில் மொத்தம் 2732 மாணவ, மாணவிகள் வின்னப்பித்தனர் . இதில் 2363 மாணவர்கள் தேர்வு எழுதினர். மீதமுள்ள 369 பேர் தேர்வு எழுதவில்லை என பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Similar News
News January 19, 2026
வேலூர்: செவிலியர் துறையில் 999 காலிஇடங்கள் Apply Now!

தமிழ்நாடு சுகாதார துறையில், செவிலியர் உதவியாளர் (தரம்-2) 999 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10th & Nursing Assistants Course முடித்திருந்தால் போதும். மாத சம்பளம் ரூ.15,700 முதல் ரூ.58,100 வரை வழங்கப்படும். விண்ணப்பிக்க விரும்புவோர் பிப்.08-க்குள் <
News January 19, 2026
BREAKING: வேலூர் பள்ளி மதிய உணவில் பல்லியா?

வேலூர் மாவட்டம், அரசு உதவி பெறும் பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், மதிய உணவில் பல்லி இருந்ததாக மாணவர்கள் குற்றம்சாட்டியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பின்னர் மாணவர்களுக்குப் பரிமாறப்பட்ட உணவின் மாதிரியை அதிகாரிகள் ஆய்வுக்காக எடுத்துச் சென்றுள்ளனர்.
News January 19, 2026
வேலூர் ஒழுங்குமுறை கூட விற்பனை நிலவரம்

வேலூர் டோல்கேட் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நெல் மூட்டைகளின் இன்றைய (ஜன.19) விலை நிலவரம் வெளியாகி உள்ளது. இதில் 75 கிலோ நெல் மூட்டைகள் ரூ.1,550 – 2,060 வரையும், மகேந்திரா 606 ரகம் ரூ.1,451 முதல் 1,989, நர்மதா ரூ.1,090 – 2,050 வரையும், மணிலா (80 கிலோ) ரூ.8,020 முதல் 10,289, கொப்பரை தேங்காய் ஒரு கிலோ 123 முதல் 180 ரூபாய் வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


